தமிழ்நாடு

விஜய் செல்லும் இடங்களில் இதுபோன்ற செயல் சரியல்ல – நயினார் நாகேந்திரன்

விஜய் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது என நயினார் நாகேந்திரன் கருத்து

விஜய் செல்லும் இடங்களில் இதுபோன்ற செயல் சரியல்ல – நயினார் நாகேந்திரன்
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தவெக தலைவர் விஜய்
ஆர்எஸ்எஸ் தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தால் அந்த இடத்தில் கரண்ட் கட்டு செய்வீர்களா? செய்துதான் பாருங்களேன். பேஸ்மண்ட் அதிரும் இல்லையா? பாஜக தான் உங்களின் மறைமுக கூட்டணியே ஏன் தயக்கம். எனக்கு மட்டும் ஏன் இந்த இடத்தில் தான் பேச வேண்டும்.

தலைவர்களை ஒப்பிட்டு பேசுவது சரியல்ல

கையை இவ்வளவு தான் நீட்ட வேண்டும். என் மக்களை சந்திக்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்க நீங்கள் யார். என் மக்களை நான் சந்திப்பேன் என நேற்று நடந்த நாகை பிரசார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார்.

இந்த நிலையில், கோவையில் மோடியின் ‘தொழில் மகள்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு, “விஜய் போகிற இடங்களில் மின்சார நிறுத்தம் போன்ற செயல் சரியானது அல்ல. ஆனால் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது.

மீனவர் ஒருவர் கூட சுட்டுக்கொள்ளவில்லை

காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் ஆட்சியில் இருக்கும்பொழுது, மீனவர்களை சுட்டுக்கொன்றார்கள். பிணமாக தான் மீனவர்கள் வந்தார்கள். தற்போது தூக்கு தண்டனையில் இருந்துக்கூட பிரதமர் மோடி மீட்டுக்கொண்டு வந்துள்ளார். ஒருவர் கூட சுட்டுக் கொள்ளவில்லை” என தெரிவித்தார்