தமிழ்நாடு

சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது

தனது காதலி போல இருந்ததால் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான நபர் வாக்குமூலம்

 சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நபர்
சென்னை வடபழனி பகுதியில் தாயார், சகோதரியுடன் வசித்து வருபவர் 17 வயது கல்லூரி மாணவி. இவர் வடபழனியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார்.
கடந்த 16ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு தனியாக நடந்து சென்று கல்லூரி மாணவி வீட்டிற்கு வந்தார்.

பாலியல் தொல்லை

அப்போது வீட்டிற்குள் புகுந்த் அடையாளம் தெரியாத நபர், அந்த கல்லூரி மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த மாணவி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மிரட்டியவுடன் நபர் வெளியில் தாழ்பாள் போட்டுவிட்டு தப்பி விட்டார்.

இதுகுறித்து கல்லூரி மாணவியின் சகோதரி வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சைல்டு வெல்பேர் கமிட்டி அதிகாரிகளும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் சம்பவம் நடந்தது உண்மை என தெரியவந்தது.

கைதானவர் வாக்குமூலம்

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பாலியல் தொல்லை கொடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவரிடம் விசாரணை நடத்திய போது, குமரேசன் வடபழனியில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு வந்து மது அருந்தி உள்ளனர்.

பின்னர் மீண்டும் பீர் வாங்கி தருவதாக அவரது அண்ணன் கூறியதால் அதே பகுதியில் அண்ணனுக்காக குமரேசன் காத்திருந்துள்ளார். அப்போது சாலையில் தனியாக கல்லூரி மாணவி சென்று கொண்டிருந்த போது, அதை போதையில் இருந்த குமரேசன் பார்த்துவிட்டு தனது காதலி போல இருந்ததால் பின் தொடர்ந்து சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைதானவருக்கு மாவுக்கட்டு

பின்னர் வீட்டிற்கு சென்றவுடன் தெரியாமல் உள்ளே நுழைந்து கட்டி அணைத்தபோது தான், தனது காதலி இல்லை என்பது தெரிந்ததாகவும், ஆனால் அதற்குள் கூச்சலிட்டு கத்தியை எடுத்து மிரட்டியதால் தாழ்பாளிட்டு தப்பிச்சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் கல்லூரி மாணவியின் மீது கைவைத்த நபரின் கைக்கு காவல்துறையினர் மாவுக்கட்டு போட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கக்கூடிய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.