சென்னை அடையாறு கஸ்தூரி பாய் நகரைச் சேர்ந்தவர் நேகா சேவியர் (28). இவர் இன்று இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்றார். அடையாறு மேம்பாலம் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த திருவான்மியூரில் கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பேருந்து நேகா சேவியர் பைக் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரசு பஸ் மோதி இளம்பெண் உயிரிழப்பு
இது குறித்து தகவல் அறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நேகா சேவியர் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தி மாநகர பேருந்து ஓட்டுனர் வேளச்சேரியைச் சேர்ந்த அண்ணாதுரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அடையாறு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.