நடிகர் விஜய்யின் தவெக (தமிழக வெற்றி கழகம்) கூட்டத்தில் கரூர் விபத்து ஏற்பட்ட விவகாரம் குறித்து, நடிகர் எஸ்.வி.சேகர் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது கடமையைச் செய்த அரசு மீது பழிபோடுவது விஜய்யின் கோழைத்தனம் என்று அவர் சாடியுள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் எஸ்.வி.சேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரூர் விவகாரம் குறித்துக் கடுமையாகப் பேசினார்.
கரூர் விபத்து குறித்துக் குற்றச்சாட்டு
கரூர் விபத்து நடந்து 36 மணி நேரம் கழித்து வருத்தமான முகத்தோடு ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் விஜய். அவரது இயக்கத்தின் தரப்பில் 10,000 பேர் தான் வருவார்கள் என்று அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், 25,000 பேர் வந்திருக்கிறார்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதுதான் ஒரு நல்ல நிர்வாகத் திறனுடையவருக்கு அழகு, என்று எஸ்.வி.சேகர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், அரசு செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் செய்த பிறகு, தான் தப்பித்துக் கொள்வதற்காக அரசு மீது பழிபோடுவது கோழைத்தனம். காவல்துறையினர் மீது குற்றம் சொல்வது முறையல்ல. ஒரு அரசியல் தலைவராகச் செயல்படும்போது, இந்தச் சம்பவத்தின் மூலம் அரசியலின் முதல் பாடத்தை விஜய் பெரிய விலை கொடுத்து வாங்கிவிட்டார், என்றார்.
இரங்கல் தெரிவித்தது வீண்
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுவிட்ட நிலையில் விஜய் இரங்கல் தெரிவித்தது குறித்தும் எஸ்.வி.சேகர் கருத்துத் தெரிவித்தார்.
உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. தகனம் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் நீங்கள் இரங்கல் தெரிவித்து என்ன பயன் கிடைக்கப்போகிறது? இனி போய் இரங்கல் தெரிவித்து என்ன பயன் என்று தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு காவல்துறை விஜய்யைக் கைது செய்யாது என்றும், அப்படிச் செய்தால் அதையும் வைத்து விஜய் அரசியல் செய்வார் என்றும் எஸ்.வி.சேகர் குறிப்பிட்டார்.
முன்னதாக, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இறப்பே கிடையாது என்றும், முத்தமிழ்றிஞர் கருணாநிதிதான் அவருக்குச் சிலை நிறுவினார் என்றும் எஸ்.வி.சேகர் அஞ்சலி உரையில் பேசினார்.