திருவள்ளூர்- புட்லூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கடந்த ஜூன் மாதம் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் டாஸ்மாக் குடோனில் வேலை செய்து வந்த அரவிந்த் மேத்யூ என்பது தெரிய வந்தது. ரயில்மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே போலீசார் சந்தேகித்தனர். ஆனால் அவரது தந்தை தனது மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரயில்வே போலீசார் அரவிந்த் மேத்யூ குறித்து விசாரணை நடத்தியதில் அவர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள பகுதியில் பொதுமக்களை மிரட்டி மாமூல் வசூலிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
இந்த நிலையில் அரவிந்த் மேத்யூ கொலை செய்யப்பட்டு உள்ளார். என்பது தெரிந்தது. அவரது கால் ரெக்கார்டு உள்ளிட்டவை ஆய்வு செய்து விசாரணையில் கொலை செய்ததாக அயப்பாக்கத்தைச் சேர்ந்த உஷா (29) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச்சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என மொத்தம் 3 பேரைத் திருவள்ளூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் உஷாவின் தோழியுடைய வீடு திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ளது. அந்த வீட்டிற்கு அடிக்கடி உஷா வந்து சென்றுள்ளார். வரும் போதெல்லாம் அரவிந்த் மேத்யூ அவரை மடக்கி கிண்டல் செய்வது, பணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இலவசமாகத் தன்னோடு இருக்க வேண்டும் என வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் உஷா திருள்ளூர் புட்லூர் ரயில் நிலையம் அருகே குடியேற முடிவு செய்திருந்தார். அரவிந்த் மேத்யூ தொல்லைகு றித்து தனது ஆண் நண்பர் விஷ்வாவிடம் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் தொடர்ந்து அரவிந்த் மேத்யூ அவருக்குத் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் அரவிந்தை கண்டித்துள்ளார். அவரைப் பழிவாங்குவதற்காக உஷா போன் செய்து வீட்டிற்கு வர வைத்துள்ளார். கடந்த ஜூன் 18 ஆம் தேதி வீட்டிற்கு வந்த அரவிந்த் மேத்யூவும் உஷாவும் ஒன்றாக மது குடித்து உள்ளனர். பிறகு உடலுறவு வைத்துக் கொள்ளலாமெனக் கூறி அரவிந்த் மேத்யூவை உஷா கை, கால்களைக் கட்டிலோடு கட்டிப்போட்டதாகத் தெரிகிறது. உடைகளைக் களைந்து விட்டுப் பிறகு உஷா போன் பேசுவது போல நடித்து ஆண் நண்பர் விஷ்வா, பால்ராஜ், மற்றும் 17 வயது 2 சிறுவர்கள் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர். கட்டிலில் போதையில் படுத்து இருந்த அரவிந்த் மேத்யூவை சுடிதார் துப்பட்டாவில் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
பிறகு உடலை என்ன செய்யலாமெனத் திட்டமிட்டு பைக்கில் தூக்கி வைத்துக் கொண்டு திருவள்ளூர் - புட்லூர் ரயில் தண்டவாளத்தில் வீசி விட்டுத் தப்பி விட்டனர். மேலும் கட்டிலில் அரவிந்த் மேத்யூ உடலோடு செல்பி எடுத்து இன்ஸ்டாவிலும் விஷ்வா பதிவிட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. உஷாவின் முதல் கணவர் பாண்டியன் என்பவரும் கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு உஷாவின் நடவடிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டு தவறான பழக்கத்தால் தற்போது கொலை வழக்கில் சிக்கி சிறைக்குள் அடைக்கப்ட்டுள்ளார்.
மேலும் விசாரணையில் பால்ராஜ் உடைய துாண்டுதலின் பேரில் உஷா, அவருடன் இருந்த விஷ்வா, ஜெய்சாந்த் மற்றும் முருகையன் என்ற சார்லஸ் ஆகியோர் ஒன்று சேர்ந்து திட்டம் தீட்டி அரவிந்த் மேத்தியுவை உஷாவின் வீட்டில் வைத்துக் கொலை செய்த இரயில்வே தண்டவாளத்தில் போட்டுவிட்டால் கொலை செய்தது தெரியாது என்று பேசிக்கொண்டு அன்று இரவு ஆனதும் கொலை செய்யப்பட்ட நபரை இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று தண்டவாளத்தில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்துள்ளனர்.

மறுநாள் இவர்கள் தங்கியிருந்த வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். உஷா தங்கியிருந்த வீட்டில் கடைசியா மேத்யூ உடைய கைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுளதால், மேலும் சந்தேம் வலுத்து போலீசார் இக்கும்பலைப் பற்றித் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், நேற்று 08.08.2025-ம் தேதி காலை புட்லுார் அம்மன் கோயில் அருகே இருந்த உஷா, விஷ்வா மற்றும் ஜெய்சாந்த் ஆகியோரை தனிப்படையினர் பிடித்து விசாரித்ததில் மேத்யூவை கொலை செய்தது தாங்கள் தான் என்று ஒப்புக்கொண்டனர். கைது செய்யப்பட்ட உஷா, விஷ்வா மற்றும் ஜெய்சாந்த் ஆகிய சிறார்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து உஷாவை நீதிமன்ற காவலுக்கும், சிறார்களைச் சிறார் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த பால்ராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முருகையன் என்ற சார்லஸ் தற்போதுவரை தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்த தனிப்படையினரை, ரயில்வே காவல்துறை இயக்குனர், தலைவர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டினார்கள்.