அரசியல்

மதுரையில் த.வெ.க. மாநாடு: வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள்குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 21 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாகனங்களுக்கான போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்தம்குறித்த முக்கிய வழிமுறைகளை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

மதுரையில் த.வெ.க. மாநாடு: வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள்குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
மதுரையில் த.வெ.க. மாநாடு: வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள்குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு, ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் உள்ள மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்ற இடத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான வழிகள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்கள்குறித்து மதுரை மாவட்ட காவல்துறை முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள்

மாநாட்டிற்கு வரும் வாகனங்களை எளிதாக நிர்வகிக்க, காவல்துறை பல்வேறு பார்க்கிங் இடங்களை ஒதுக்கியுள்ளது. அதற்கேற்ப மாவட்ட வாரியாக வாகனங்கள் வர வேண்டிய வழித்தடங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடையலாம்.

ராமநாதபுரத்திலிருந்து வரும் வாகனங்கள் பார்த்திபனூர், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி வழியாக மாநாட்டு திடலுக்கு வர வேண்டும்.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வழியாக வந்து அ.முக்குளம், மீனாட்சிபுரம், ஆவியூர் வழியே மாநாட்டுத் திடலை அடையலாம்.

மேற்கண்ட அனைத்து வாகனங்களும் பார்க்கிங் 1-ஐ பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கான வழித்தடங்கள்

வட மாவட்டங்களான சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள், திருச்சி மார்க்கமாக வந்து விராலிமலை, மேலூர், விரகனூர் சுற்றுச்சாலை, அருப்புக்கோட்டை சந்திப்பு வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும். இந்த வாகனங்கள் பார்க்கிங் 2 மற்றும் 3-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கு மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் திண்டுக்கல் மார்க்கமாக வந்து, நாகமலை புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், கூடக்கோவில் வழியாகச் செல்லலாம்.

தேனி மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்கள் ஆண்டிபட்டி கனவாய் வழியாக உசிலம்பட்டி, நாகமலை புதுக்கோட்டை பைபாஸ் வழியாக மாநாட்டு திடலுக்கு வரலாம். இந்த வாகனங்களும் பார்க்கிங் 1-ஐ பயன்படுத்தலாம்.

இந்தப் போக்குவரத்து ஏற்பாடுகள், மாநாட்டிற்கு வரும் அனைவரும் பாதுகாப்பாகவும், தடையின்றியும் மாநாட்டை அடைவதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.