தமிழ்நாடு

சென்னை திரும்பிய தனுஷை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்களால் பரபரப்பு

கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பிய தனுஷ் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்தனர்.

  சென்னை திரும்பிய தனுஷை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்களால் பரபரப்பு
கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய நடிகர் தனுஷை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்கள்
கோவையில் ‘இட்லி கடை’ திரைப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் நடிகர் தனுஷ் புறப்பட்டு சென்றார். தான் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் மால் வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் பங்கேற்றார்.

தனுஷை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்கள்

இந்த டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், நடிகை நித்தியா மேனன், பிரபல முன்னணி நடிகர்களான சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ,பாடகர் ஸ்வேதா மோகன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அதன் பின்பு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நடிகர் தனுஷ் அங்கிருந்து புறப்பட்டு கோவையில் இருந்து தனி விமான மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த உடன் அவரது ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செல்ஃபி மற்றும் போட்டோ எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் விமான நிலையத்தில் இருந்து தனது காரில் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார். நடிகர் தனுஷுடன் ரசிகர்கள் போட்டோ எடுக்க முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.