தமிழ்நாடு

மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு

சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர்

 மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு
வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு
தஞ்சை மாவட்டம், திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என ஏராளமானவர்கள் புனித நீராடி அரிசி, காய்கறி, கீரை ஆகிய பொருட்களை புரோகிதருக்கு தானமாக கொடுத்து, மறைந்த தங்கள் தாய், தந்தை, மூதாதையர்களை நினைத்து திதி கொடுத்தனர். பின்னர் எள், அரிசியை காவிரி ஆற்றில் விட்டு சூரியனை வணங்கி வழிப்பட்டனர். புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை என்பதால் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

மகாளய அமாவாசை

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அந்தவகையில் இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு

இதையொட்டி சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து வேத மந்திரங்கள் சொல்லப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்தனர். இதில் வந்தவாசி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சென்றனர். இதேபோல் ராமேஸ்வரம், திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.