திருநெல்வேலியில் இன்று முன்னாள் எம்.எல்.ஏவும், பாஜக நிர்வாகியுமான விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கும் ஜிஎஸ்டி வரி மாற்றங்கள் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மக்களுக்கு இவை பயனுள்ளதாக அமையும். ஜிஎஸ்டி வரி விதிக்கும்போது பல ஐயங்கள் எழுந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டின் உள்கட்டமைப்பு எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதை மக்கள் காண முடியும்.
பாஜக கூட்டணி உறுதியாக உள்ளது
இது தேசிய அளவில் வளர்ச்சிக்கு உதவியுள்ளது. விலை ஏற்றம் கட்டாயம் செய்யக்கூடாது. மத்திய அரசு மாநிலங்களைப் பிரித்துப் பார்க்காமல் அனைத்து மாநிலங்களும் வளரக்கூடிய அளவிற்கு மெட்ரோ திட்டம், நீர்நிலை திட்டம் போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் ஒரே மாதிரியாக உயர்த்துவதில் மத்திய அரசின் நிதி அவசியம். மேலும், தமிழ்நாடு அரசு மத்திய அரசின் நிதிகளைப் பெற்றுக்கொண்டு அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
கூட்டணி அரசியல் குறித்து பேசிய அவர், எதிர்க்கட்சிக் கூட்டணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது. டிசம்பரில் உறுதியாக மிகப்பெரிய கூட்டணி அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், டிடிவி தினகரன் பாஜக கூட்டணி யாருடன் கூட்டணி வைத்தாலும் வெற்றி பெறாது என்ற கேள்விக்கு, நேரடியாக பதிலளிக்காமல் மழுப்பலாகப் பேசினார். பின்னர், அமமுக கட்சி பாராளுமன்ற தேர்தலில் எங்களுடன் பயணித்தவர்கள் என்றும், சில கருத்து வேறுபாடுகள் விரைவில் சரி செய்யப்படும் என்றும், டிடிவி தினகரன் பலமான கூட்டணியுடன் இணைவோம் என்று கூறியது நிச்சயமாக பாஜகவாகத் தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக நெருக்கடி கொடுக்காது
அதிமுகவின் உள்ள குழப்பங்களை சரி செய்ய பாஜக உதவி செய்யும் என்று கூறிய விஜயதாரணி, அதிமுகவை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறதா என்ற கேள்விக்கு, பாஜக யாருக்கும் எந்த நெருக்கடியும் கொடுக்காது என்று திட்டவட்டமாக மறுத்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதிமுகவில் அமித்ஷா தான் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்று கூறியது குறித்து கேட்டபோது, அதற்கு பதிலளித்த விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் பிரச்சனைகளை திமுக தான் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி விளங்காமல் போனதற்கு திமுகதான் காரணம் என்றும் சரமாரியாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சி துண்டு, துண்டாக உடைந்து போன கண்ணாடி என்றும் அவர் விமர்சித்தார்.
தவெகவில் இணைகிறேனா?
தமிழக வெற்றி கழகத்தில் அழைப்பு வந்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு, இதுவரை அதுபோல் எதுவும் இல்லை என்றும், இது காய்கறி வியாபாரம் இல்லை என்றும் திட்டவட்டமாக மறுத்தார். தானே முடிவு செய்து காங்கிரஸிலிருந்து பிரிந்து பாஜகவிற்கு வந்திருப்பதாகவும், தனது நிலையிலேயே இருப்பேன் என்றும், இதுபோன்ற கேள்விகளை அவதூறாக நினைப்பதாகவும் விஜயதாரணி கூறினார். மேலும், உண்மையான வாக்காளர்களை கண்டறிவதில் மத்திய அரசு தெளிவாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.