தமிழ்நாடு

விஜய் ஏதோ பேசுகிறார் என்பதற்காக த.வெ.க. மாற்றாக வர முடியாது- எச்.ராஜா விமர்சனம்

தமிழகத்தில் அடுத்த தலைமுறை மக்களை அழித்துக்கொண்டிருக்கும் பேரழிவு சக்தி தான் ஸ்டாலின் அரசு என எச்.ராஜா விமர்சனம்

 விஜய் ஏதோ பேசுகிறார் என்பதற்காக த.வெ.க. மாற்றாக வர முடியாது- எச்.ராஜா விமர்சனம்
தவெக தலைவர் விஜய் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா
திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் மோடியின் 76வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15 நாட்களுக்கு சேவை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் என்பது இல்லை பெரிய பொருளாதார மாற்றத்தை கொண்டு வரும் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிதியாண்டின் (25 - 26ல்) மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதார ரீதியான இரண்டாவது சீரமைப்பு.


கடந்த 2014ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிடமிருந்து பொருளாதாரப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, இந்தியா நெருங்கும் பொருளாதாரத்தில் 5ல் ஒன்றாக இருந்தது. இன்றைக்கு உலகிலேயே நான்காவது பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியா வளர்ந்து இருக்கிறது. மூன்றாவது இடத்திற்கு விரைவில் வரும் நிலையிலும் உள்ளது. வரும் 2027ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது பொருளாதாரம் வளர்ச்சி பெற்ற நாடாக வருவோம் ( இந்தியா 4.17 டிரில்லியன ஜெர்மன் 4.67 டிரில்லியன் பொருளாதரம்) அந்த வளர்ச்சிகளை கருத்தில் எடுத்துக் கொண்டு இந்த நிதியாண்டில் போடப்பட்டுள்ள பட்ஜெட்டில் 12 லட்சம் ரூபாய் வரை ஒருவருக்கு வரி இல்லை என்று கொண்டு வரப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி

ஒரு பொருளுக்கு நான்கு விதமான வரி விதிப்புகள் இருந்த சூழ்நிலையில், 32 விதமான வரிகளை ஒருங்கிணைத்து ஒரே வாரியாக 2017 ஜூலை 1ஆம் தேதி ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கொண்டுவரப்பட்டது. நான்கு ஸ்லாப் வரிவிதிப்பு முறையை மாற்றி இரண்டு ஸ்லாப் வரிவிதிப்பு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரி வருவாய் இழப்பு இருக்கத்தான் செய்யும். அதே சமயம் இந்தியா ஏற்றுமதி செய்யும் உற்பத்தி செய்யும் நாடு மட்டுமல்ல, 140 கோடி வாடிக்கையாளர்கள் உள்ள பெரிய மார்க்கெட்டாக இந்தியா உள்ளது. எனவே உள்நாட்டு நுகர்வுக்கான வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் 25 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு மேலே கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் பணப்புழக்கம் ஏற்பட்டு உள்நாட்டு நுகர்வு அதிகரிக்கும். அதன்மூலம் வணிகம் அதிகரித்து வரி வருவாயும் அதிகரிக்கும். அந்த எதிர்பார்ப்பில் ஜிஎஸ்டி 2 திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஏற்கனவே செய்திருக்க வேண்டாமா என்று முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்புகிறார். அப்போது (2017ல்) ஜி எஸ்டிஐ நடைமுறைப்படுத்த முயன்றபோது அனைத்து மாநில அரசுகளும் ஜிஎஸ்டி வரி விதிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ஐந்து ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதை ஒப்புக்கொண்டு மாநிலங்களின் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்துள்ளது. அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு வருவாய் இழப்பை ஈடு செயவதாக மத்திய அரசு ஒப்புக்கொண்ட நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பின் ஸ்லாப்பை எப்படி குறைக்க முடியும். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் போன்றவர்கள் இதுபோன்ற வாதத்தை வைப்பது அரசியல்தான்.

வேலை வாய்ப்பு அதிகரிப்பு

தற்போது ஸ்டாலினோடு கூட்டணி வைத்திருக்கும் அவர் அரசியல் செய்யாமல் அவியலா செய்வார். கடந்த 2017 ஜூன் 30-ல் ஒரு ஆண்டுக்கான மறைமுக வரி வசூல் 7 லட்சத்து 17 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது, 22 லட்சத்த்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து இருக்கிறது.அதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு மாதத்திற்கு 2 லட்சம் கோடி மறைமுக வரி வசூல் இருக்கிறது. நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அதிகரிப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 353 விதமான பொருட்களுக்கு வரி விலக்கு மற்றும் குறைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பால் ஏற்படும் பலனை 100% நுகர்வருக்கு கொண்டு செல்ல வேண்டும். எந்தவிதமான யூகங்களுக்கும் நான் பதில் சொல்ல முடியாது.

சமூகமாக பேச்சுவார்த்தை

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பாஜக எப்போதும் எங்களுடன் இருந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். எப்போதும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். அமித்ஷாவை சந்தித்தபோது அவர் எல்லா விஷயங்கள் குறித்தும் பேசியிருக்கலாம் என்று நாம் நம்பலாம். இபிஎஸ் அமித்ஷா என்ன பேசினார்கள் என்பது எனக்கு தெரியாது. உங்களுக்கும் தெரியாது. அவர்கள் வெளியே சொன்னால் தான் தெரியும். அதே சமயம் சுமூகமாக நடந்திருக்கிறது. கட்சி உடைவதற்கு பாஜக வேலை செய்வதில்லை. திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியே போனார். அதற்கு யார் காரணம் கருணாநிதி. அதேபோல் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் எத்தனையோ இருக்கிறது.

காங்கிரஸ் எத்தனை முறை உடைந்து இருக்கிறது. கட்சிகளுக்குள் பிளவுக்கு பாரதிய ஜனதா கட்சி எந்த விதத்திலும் காரணம் இல்லை. மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் முடிவு எடுத்து விட்டால், யார் யாரிடம் இருக்கிறார்கள் என்று மக்கள் சிந்திக்க மாட்டார்கள். ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அரசு ஊழல் அரசை கலை எடுக்க மாட்டோமா என்று மக்கள் நினைக்கின்றனர். அந்த அளவுக்கு திமுக அரசு மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். இன்றைய அரசியல் சூழலில் யார் கூட்டணியில் இருக்கின்றனர். யார் வெளியே சென்றனர் என்பது பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.

தவெக மாற்றாக வர முடியாது

தமிழகத்தில் அடுத்த தலைமுறை மக்களை அழித்துக்கொண்டிருக்கும் பேரழிவு சக்தி தான் ஸ்டாலின் அரசு. போதைப்பொருள் வருமானத்தில் சினிமா தயாரிக்கும் மக்களுக்கு எதிரான அரசு வேறு எங்கும் இருக்க முடியாது. ஸ்டாலின் அரசு தொடரும் ஒவ்வொரு நாளும் தமிழ் சமுதாயத்திற்கு அடுத்த தலைமுறைக்கும் அழிவுதான். எத்தனை கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது என்பது பற்றி கவலை இல்லை.இந்த அழிவு சக்தியை மக்கள் தூக்கி எறிவார்கள்.

வரும் தேர்தலில் எத்தனை முனை போட்டி வந்தாலும், போதை அரசாங்கம் தூக்கி எறியப்படும். திடீரென சினிமாவில் இருந்து வந்தவர் ஏதோ பேசுகிறார் என்பதற்காக த.வெ.க. மாற்றாக வர முடியாது. பாரதிய ஜனதா கொள்கை எதிரி என்ற விஜய் அவருடைய கொள்கை என்னவென்று சொல்லியிருக்கிறாரா? அவருடைய பேச்சு அர்த்தமற்ற வெறும் பேச்சுக்கள் தான்” என தெரிவித்தார்.