திருநெல்வேலி அருகே ஜெபம் செய்யச் சென்றவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களுக்கு குங்குமம் பூசி ரகளையில் ஈடுபட்ட பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (ஐ.என்.எஸ்.) சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்டோர், கீழக்கல்லூர் மற்றும் நடுக்கல்லூர் கிராமங்களுக்கு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்றனர். கீழக்கல்லூர் பகுதியில் உடல்நலம் குன்றிய உறவினருக்காகச் ஜெபம் செய்யச் சென்ற அவர்களை, இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மகாதேவன், பா.ஜ.க-வைச் சேர்ந்த அங்குராஜ் உட்பட 3 பேர் வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அனுமதி இல்லாமல் நுழைந்து, மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மதப் பிரச்சனையைத் தூண்டுகிறீர்கள் எனக் கூறி அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. மேலும், ஜெபம் செய்ய வந்த குழுவினரில் சிலரை வலுக்கட்டாயமாக அருகிலிருந்த கோவிலுக்கு அழைத்துச் சென்று, நெற்றியில் குங்குமம் பூசி, கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டுச் செல்லும்படி மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக, ஆலங்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் கிறிஸ்தவ சபைப் பணியாளருமான டேவிட் நிர்மல்துரை என்பவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை வழிமறித்த மூவர், இந்த ஊருக்குள் ஜெபம் செய்ய வந்தால் வெட்டிக் கொன்றுவிடுவோம் எனக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், வலுக்கட்டாயமாக நெற்றியில் குங்குமம் பூசி மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், மணிகண்டன் மகாதேவன், அங்குராஜ் மற்றும் அவரது சகோதரரான சங்கர் ஆகிய மூன்று பேர் மீது சுத்தமல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, இந்திய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 126(2) (மத அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 299 (கொலை மிரட்டல்), மற்றும் 351(2) (கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.