இந்தியா

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரை...முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

புதிய ஜிஎஸ்டி வரிமுறை நாளை அமலுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரை...முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்

பிரதமர் மோடி இன்று (செப்.21) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி நாளை அமலுக்கு வரும் நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றுகிறார். எச்1பி விசா முறைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் பேச வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்

இந்தியாவில் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் செப்.22ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகின்றன.இந்த சீர்திருத்தங்கள், ஜிஎஸ்டி கட்டமைப்பை எளிமையாகவும், வளர்ச்சி சார்ந்ததாகவும் மாற்றத்தை நோக்கமாகக் கொண்டவை எனவும் இதன் மூலம், நுகர்வோருக்கும், வணிகங்களுக்கும் நிவாரணம் கிடைப்பதோடு, பொருளாதாரத்தில் முதலீடுகள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அமெரிக்காவில் புதிதாக எச்.1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தி அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். இதனால் இந்திய தொழில்நுட்பத்துறையினர் பெருமளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் மற்றும் சவுதி இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான ஒப்பந்தம் சர்வதேச அளவில் பேசுபொருளானது.

பிரதமர் மோடி இன்று மாலை உரை

இதற்கிடையே இந்த ஒப்பந்தம் நம் நாட்டு பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு, சர்வதேச பாதுகாப்பில் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும். அதே நேரம் எந்த சூழலிலும் நமது நாட்டின் பாதுகாப்பில் சமரசம் இருக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே முக்கிய விவகாரம் குறித்து உரையாற்ற உள்ளார். ஆகையால் ஜிஎஸ்டி சீர்த்திருத்தம், எச்.1பி விசா விவகாரம், பாகிஸ்தான் மற்றும் சவுதி இடையேயான ஒப்பந்த ஆகியவை குறித்தான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.