மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், கடந்த புதன்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் காலமானார். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸின் தலைமைப் பொறுப்பையும், ஆட்சியில் அஜித் பவார் வகித்து வந்த இடத்தையும் யார் நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், அவரது மனைவி துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வருடன் முக்கிய ஆலோசனை
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல் மற்றும் மூத்த தலைவர்களான சகன் புஜ்பால், சுனில் தட்கரே உள்ளிட்டோர் நேற்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸைச் சந்தித்துப் பேசினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவாருக்குத் துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கட்சியின் விருப்பத்தை அவர்கள் முன்வைத்தனர்.
பட்னாவிஸின் பச்சைக்கொடி
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், "அஜித் பவார் குடும்பத்தைச் சேர்ந்தவர் இந்தப் பதவிக்கு வருவதில் தங்களுக்கு முழு உடன்பாடு" என்று தெரிவித்தார். மேலும், சுனேத்ரா பவாரைத் தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்துவிட்டால், அவரைத் துணை முதல்வராக நியமிப்பதில் தங்களுக்கு எந்தத் தடையுமில்லை என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவர் சகன் புஜ்பால், "கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூடி, சட்டமன்றக் கட்சித் தலைவராகச் சுனேத்ரா பவாரைத் தேர்வு செய்ய உள்ளோம். கட்சியின் பெரும்பான்மையான தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் விருப்பமே இதுதான்" என்று கூறினார். இந்தத் தேர்வைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணிக்கே சுனேத்ரா பவார் துணை முதல்வராக பதவியேற்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LIVE 24 X 7