மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
எரிபொருள் இருப்பு நிலை
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவிடம் சுமார் 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. இதனால் உடனடித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர காலத் தேவைகளுக்காக மூலோபாய எண்ணெய் சேமிப்பு மையங்களிலும் (Strategic Petroleum Reserves) போதுமான அளவு எண்ணெய் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மாற்று வழிகள் மற்றும் இறக்குமதி
வளைகுடா நாடுகளில் போர் தீவிரமடைந்தால் விநியோகம் பாதிக்கப்படாமல் இருக்க, மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிட்டுள்ளது. வளைகுடா நாடுகள் தவிர்த்த மற்ற மாற்று சந்தைகளில் இருந்து கச்சா எண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு (LPG) மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் எரிபொருள் விநியோகச் சங்கிலியைச் சீராக வைத்திருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
விலை உயர்வுக்கு வாய்ப்பில்லை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றங்கள் இருந்தாலும், தற்போதைக்கு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என அரசு வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. இது சாமானிய மக்களுக்குப் பெரும் ஆறுதலை அளிக்கும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7