ஒடிசாவில் தனது சகோதரியின் சேமிப்புப் பணத்தைப் பெறுவதற்காக, புதைக்கப்பட்ட அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்குக் கொண்டு வந்து பழங்குடியின நபர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் மல்லிபாசி கிராமத்தைச் சேர்ந்த ஜிது முண்டா என்ற பழங்குடியின நபரின் சகோதரி இரண்டு மாதங்களுக்கு முன்பு காலமானார். அவரது வங்கித் கணக்கில் இருந்த சுமார் ரூ.19,300 பணத்தை எடுப்பதற்காக ஜிது முண்டா வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், கணக்கு வைத்திருப்பவர் உயிரிழந்துவிட்டதால், முறையான இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே பணத்தைத் தர முடியும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆவணத்திற்குப் பதிலாக எலும்புக்கூடு
படிப்பறிவில்லாத ஜிது முண்டாவிற்கு இறப்புச் சான்றிதழ் என்பது என்னவென்று புரியவில்லை. தனது சகோதரி இறந்துவிட்டதற்கான ஆதாரத்தை வங்கி அதிகாரிகள் கேட்டதாகப் புரிந்துகொண்ட அவர், புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, அதிலிருந்த எலும்புகளை ஒரு மூட்டையில் கட்டி வங்கிக்குக் கொண்டு வந்தார். நேற்று மதியம் 1 மணியளவில் வங்கிக்கு வந்த அவர், அதிகாரிகளின் மேசை முன்பாக அந்த எலும்புகளைக் கொட்டிப் பணத்தைக் கேட்டுள்ளார்.
பயத்தில் உறைந்த அதிகாரிகள்
இந்தக் கொடூரமான காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பயத்தில் உறைந்து போயினர். உடனடியாக வங்கி ஊழியர்கள் தங்களை உள்ளே பூட்டிக்கொண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜிது முண்டாவிடம் பேசி, இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளை விளக்கிக் கூறினர். அவர் எவ்வித உள்நோக்கமும் இன்றி, அறியாமையாலேயே இந்தச் செயலைச் செய்ததை உணர்ந்த போலீசார், அவரை எச்சரித்து எலும்புக்கூட்டை மீண்டும் அடக்கம் செய்ய அனுப்பி வைத்தனர்.

LIVE 24 X 7