மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது பெண் குழந்தையைத் தாய் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
லத்தூரின் ஷியாம் நகர் பகுதியில் வசிக்கும் 34 வயது தொழிலாளி ஒருவர், கடந்த 19 ஆம் தேதி அதிகாலை வேலை முடிந்து வீட்டிற்குத் தாமதமாக வந்துள்ளார். இதனால் அவருக்கும், அவரது 30 வயது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கொடூரக் கொலை
கணவன் மீது ஏற்பட்ட ஆத்திரத்தில், அந்தப் பெண் வீட்டில் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து தனது ஒரு வயது மகளை முகம், வயிறு, தலை என உடலின் பல இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் அந்தக் குழந்தை ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
கைது நடவடிக்கை
இதனைத்தொடர்ந்து, குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7