தமிழ்நாடு அறிவியல் இயங்க சூழலியல் உபக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெரியகுடி, திருவாரூர், அன்னவாசநல்லூர் ஆகிய இடங்களில் ஷேல் ஆய்வு கிணறுகள் ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக கிணறுகள்
ஓஎன்ஜிசி நிறுவனம் தனது முந்தைய அறிவிப்புக்கு மாறாக நீரியல் விரிசல் முறையில் மட்டுமே நிறைவேற்ற சாத்தியமுள்ள ஷேல் ஆய்வுக் கிணறுகளை மறைமுகமாக தோண்டியிருக்கிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின்படி, 2020ஆம் ஆண்டுக்கு பிறகு புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு தடை உள்ளது. இந்நிலையில் மேற்கண்ட 3 ஷேல் ஆய்வு கிணறுகள் தோண்டியிருப்பது தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது.
ஓஎன்ஜிசியின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து விதிகளுக்கு புறம்பாக மூன்று ஷேல் ஆய்வு கிணறுகள் தோண்டப்பட்டு இருப்பது குறித்து உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
ரத்து செய்ய வேண்டும்
மன்னார்குடியில் மீத்தேன் திட்டம், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் கொண்டுவரப்பட்ட எண்ணெய் எரிவாயு திட்டங்களை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.