பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திமுக மீது குற்றச்சாட்டு தெரிவித்தது கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்.பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.
அண்ணாமலைக்கு எதிரான வழக்கு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100 கோடி ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என அண்ணாமலை மீது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மாதம் 28ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது 21 நிறுவனங்களுக்கும் தனக்கும் தொடர்பு என அண்ணாமலை சொல்லியிருந்தார். அதில் 18 நிறுவனங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு தெரிவித்து இருந்தார். அன்றைய தினம் சுமார் ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
டி.ஆர்.பாலு நேரில் விளக்கம்
இந்நிலையில் இன்றயை தினம் இவ்வழக்கின் விசாரணை மீண்டும் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் இன்றயை தினம் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இன்றயை தினம் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேரளா சென்று உள்ளதால் அவரது தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜரானார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் பாஜக தரப்பினர் சைதாப்பேட்டை நீதிமன்றம் வருகை புரிந்ததால் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டனர்.
10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து
வழக்கு விசாரணை முடிந்த பின்னர் பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் செய்தியாளர்களை சந்திதார்,அப்போது பேசிய அவர், இன்று குறுக்கு விசாரணை நடைபெற்றது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அண்ணாமலை அவருடைய கருத்துக்களை பதிவு செய்யவில்லை என கூறினார்.
ஒரு அரசியல் தலைவராக பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய தகவலை அண்ணாமலை தெரிவித்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து உள்ளது என்பது கார்ப்பரேட் Affairs மத்திய அமைச்சகத்தில் தகவல் அடிப்படையில் சொல்லப்பட்டது என கூறினார்.
குறுக்கு விசாரணை
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுடன் வருகின்ற அக்.13ம் தேதி அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பு உள்ளது எனவும் அவர் குறுக்க விசாரணை செய்யவில்லை என்றால், அவரது சார்பாக அவருடைய வழக்கறிஞராக நான் குறுக்கு விசாரணை செய்வேன் எனவும் தெரிவித்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் யார் குறுக்கு விசாரணை செய்வது என்பது குறித்து அண்ணாமலை முடிவெடுப்பார் என தெரிவித்தார்.