இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாட்டின் செயற்கைக்கோள்களைப் பாதுகாப்பதற்காக 50 புதிய 'மெய்க்காப்பாளர்' செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு அண்டை நாட்டுக்கு சொந்தமான ஒரு செயற்கைக்கோள், இந்தியாவின் செயற்கைக்கோள் மீது மோதுவது போல் சென்றதைத் தொடர்ந்து, இந்த அதிரடித் திட்டத்தை இஸ்ரோ முன்னெடுத்துள்ளது.
விண்வெளியில் தற்போது 105 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்து 149 செயற்கைக்கோள்கள் பல்வேறு பணிகளுக்காக இயங்கி வருகின்றன. இதில், இந்தியாவின் 56 செயற்கைக்கோள்கள் தகவல் தொடர்பு, பூமி கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், இந்தியாவின் விண்வெளி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் ரூ.27,000 கோடி மதிப்பிலான திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அடுத்த ஆண்டு (2026) முதல் மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்தச் செயற்கைக்கோள்கள் நிகழ்நேர அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து, சிக்னல் ஜாம்மிங், சைபர் தாக்குதல்கள் மற்றும் எதிரி செயற்கைக்கோள்களின் குறுக்கீடுகளை முறியடிக்கும் திறன் கொண்டவை. அதிநவீன சென்சார்கள் மற்றும் லேசர் அடிப்படையிலான ரேடார் தொழில்நுட்பம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதால், வழக்கமான ரேடார்களைக் காட்டிலும் இது மிகத் துல்லியமான முறையில் அச்சுறுத்தல்களைக் கண்டறியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.