இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானச் சேவைகள் நாடு முழுவதும் கடந்த 9 நாட்களாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு, விமான ரத்துகள் மற்றும் குழப்பங்கள் நிலவிய விவகாரத்தில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) 4 விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
விமானச் சேவை பாதிப்பு
இந்தியா முழுவதும் இண்டிகோ விமானச் சேவைகள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டன. நேற்று (டிசம்பர் 12) சென்னை விமான நிலையத்தில் மட்டும் 10-வது நாளாக 36 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல், பெங்களூரு விமான நிலையத்திலிருந்தும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
விமான விபத்துகளைத் தவிர்க்க டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வகுத்த புதிய விதிகளை இண்டிகோ நிறுவனம் அமல்படுத்தவில்லை. குறிப்பாக, போதிய விமானிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாமலேயே விமான சேவையைத் தொடர்ந்ததால், கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
4 அதிகாரிகள் சஸ்பெண்ட்
விமான செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பை மேற்பார்வை செய்து, இண்டிகோ விமானச் சேவைப் பிரச்னையில் சரிவரச் செயல்படத் தவறிய 4 விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை DGCA சஸ்பெண்ட் செய்துள்ளது.
புதிய விமான விதிகளை இண்டிகோ செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட இந்த அதிகாரிகள், தங்கள் கடமையைச் செய்யத் தவறியதால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்படக் காரணமாக அமைந்தனர்.
சிறப்புக் குழுவின் அறிக்கை
விமான ரத்துகளால் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் நெரிசல், தாமதம், குழப்பம் ஆகியவை அதிகரித்த நிலையில், இதற்கான உண்மை காரணங்களை ஆராய, DGCA நான்கு பேர் கொண்ட ஒரு சிறப்புக் குழுவை அமைத்திருந்தது. அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மேற்பார்வையில் தவறிழைத்த இந்த 4 அதிகாரிகளும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

LIVE 24 X 7