குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், ஃபேஸ்புக் பதிவால் ஏற்பட்ட மோதலில் 20 வயது இளைஞர் ஒருவர் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்த நிலையில், மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஃபேஸ்புக் பதிவில் சிரிக்கும் எமோஜி
பிகாரைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் (20), தனது மூன்று உறவினர்களுடன் குஜராத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்த தனது தாத்தா ரூப்நாராயண் பிந்த் என்பவரை நினைவுகூர்ந்து பிரின்ஸ் தனது ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவை பார்த்த பிகாரைச் சேர்ந்த அவரது நண்பர் பிபின் குமார் ராஜேந்திர கோண்ட், சிரிக்கும் எமோஜியைப் பயன்படுத்தி கருத்துத் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே முதலில் தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பின்னர் ஒரு பெரிய சண்டையாக மாறியுள்ளது.
தாக்குதல் மற்றும் கொலை
கடந்த 12-ஆம் தேதி இரவு 12.30 மணியளவில், பிரின்ஸ் தான் வேலை செய்யும் தொழிற்சாலைக்கு வெளியே ஆட்டோவில் அமர்ந்திருந்தபோது, பிபின் அவரது அருகில் வந்துள்ளார். பிரின்ஸ் மீண்டும் உள்ளே செல்ல முயன்றபோது, மற்றொரு குற்றவாளியான பிரிஜேஷ் கோண்ட் அவரைத் தடுத்து நிறுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இந்தச் சமயத்தில், பிபின் பிரின்ஸை கத்தியால் குத்தியுள்ளார்.
பிரின்ஸின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது சக ஊழியர்கள், அவரை உடனடியாக ராஜ்கோட் சிவில் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் மரணம்
பிரின்ஸின் உடலில் ஒன்றரை முதல் இரண்டு அங்குலம் ஆழத்திற்கு கத்தி காயம் ஏற்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பிரின்ஸ் சுயநினைவுடன் இருந்ததால், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆரம்பத்தில் காயம் பெரிதாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிரின்ஸ், கடந்த 22-ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 103 (1)ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியக் குற்றவாளியான பிபின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரிஜேஷ் கோண்ட் தலைமறைவாக உள்ளார். பிரின்ஸின் பிரேதப் பரிசோதனை அறிக்கைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.