K U M U D A M   N E W S

இந்தியா

நீட் தேர்வு: மதிப்பெண் குறைந்ததால் மகளை அடித்து கொன்ற தந்தை!

மகாராஷ்டிர மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, நீட் பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், கோபமடைந்த அவரது தந்தை கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.

யாரு சாமி நீ.. ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டியின் பேன்சி நம்பருக்கு ரூ14 லட்சமா?

இமாச்சல பிரதேசத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்கூட்டருக்கு ரூ.14 லட்சம் கொடுத்து HP21C-0001 என்ற ஃபேன்சி எண்ணை சஞ்சீவ் என்ற நபர் வாங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், சமூக வலைதளத்தில் யாரு சாமி நீ , ரொம்ப வசதியா இருப்பாரோ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

சீட்டை விட்டுத் தர மறுத்த பயணியை ஆள் வைத்து அடித்த பாஜக எம்.எல்.ஏ.. ரயில்வே போலீசார் விசாரணை

உத்தரப்பிரதேசத்தில் வந்தே பாரத் ரயிலில் சீட் மாறி அமர மறுத்த சக பயணியை, பாஜக எம்.எல்.ஏ. ராஜீவ் சிங் ஆட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. கணவன் செய்த கொடூரம்!

கர்நாடகாவில் மனைவி தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

வேறு சாதியில் திருமணம்.. 40 பேருக்கு மொட்டை அடித்த கொடூரம்

ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர் பலி.. ஜெகன்மோகன் ரெட்டி மீது வழக்கு பதிவு

ஜெகன் மோகன் ரெட்டி சென்ற காருக்கு அடியில் சிக்கிய நபர் உயிரிழந்தது தொடர்பாக ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Yoga Day 2025: அரசியல் பிரபலங்களின் யோகா தின க்ளிக்ஸ்!

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படும் சூழ்நிலையில், இந்தியாவின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விமான விபத்து எதிரொலி.. ஏர் இந்தியாவின் முன்பதிவு சரிவு

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு, ஏர் இந்தியா விமானத்தின் முன்பதிவு 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய சுற்றுலா ஆபரேட்டர்களின் சங்க தலைவர் ரவி கோசைன் தெரிவித்துள்ளார்.

மகனுக்கு நிச்சயித்த பெண்ணை மணந்த தந்தை.. குடும்பத்தினர் அதிர்ச்சி

உத்தரப் பிரதேசத்தில் தனது 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை 55 வயது தந்தை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி கேட்பதை பாஜக விரும்பவில்லை.. ராகுல் காந்தி விமர்சனம்

"இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை" என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பீகாரிலிருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதி – தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை!

கர்நாடக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட விழாவின் ஏற்பாட்டாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளது. பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மாநில அரசு நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கும் இந்த தண்டனை பொருந்தும் என சட்ட முன்வடிவில் கூறப்பட்டுள்ளது.

விமானம் முறையாகவே பராமரிக்கப்பட்டது - ஏர் இந்தியா சி.இ.ஓ விளக்கம்!

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் முறையாகவே பராமரிக்கப்பட்டு வந்தது என ஏர் இந்தியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான விபத்து: அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கருப்புப் பெட்டி?

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தான் முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் தெரியாத 10 ஆம் வகுப்பு மாணவர்கள்: ஆசிரியரை கண்டித்த முதல்வர்

இமாச்சலப் பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் தலைமையாசிரியரை கண்டித்த சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

சில்லறை காசுகளுடன் மனைவிக்கு தாலி வாங்க வந்த முதியவர்.. கடை உரிமையாளரின் நெகிழ்ச்சி செயல்

கையில் வெறும் ரூ.1,120 மட்டும் வைத்துக்கொண்டு, தன்னுடைய மனைவிக்கு மங்களசூத்திரம் (தாலி) வாங்க நடைக்கடைக்குள் வந்த 93 வயது முதியவர் தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

'நீங்கள் பாகிஸ்தான் உளவாளி'.. பெண்ணை மிரட்டி ரூ.22 லட்சம் மோசடி

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக மிரட்டி, பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை மும்பை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது என்னங்க பாலம்? போபாலை தொடர்ந்து ஆந்திராவிலும்.. கலாய்த்த காங்கிரஸ்

மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், ஆந்திராவிலும் இதுப்போல் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தொடர்ந்து ரத்து செய்யப்படும் ஏர் இந்தியா விமானங்கள் - அவதிக்குள்ளாகும் பயணிகள்.. காரணம் என்ன?

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக போயிங் விமானத்தில் ஆய்வு மேற்கொள்ள மத்திய விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

UPI பரிவர்த்தனை நேரம் குறைப்பு: புதிய விதிகள் இன்று முதல் அமல்!

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கிய தூணாக விளங்கும் Unified Payments Interface (UPI) முறையில், இன்று (ஜூன் 17) முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், பயனர்கள் பண பரிமாற்றத்தை மிக விரைவாக மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

பெங்களூரில் பெண்ணை அறைந்த ஓட்டுநர்...அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ

'உன் மாநிலத்திற்கே போ' என்று பெண் ஒருவரை பெங்களூரில் ரேபிடோ ஓட்டுநர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து கொல்கத்தா வழியாக மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தியா 3-வது பொருளாதார நாடாக மாறும் - பிரதமர் மோடி நம்பிக்கை

இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என சைப்ரஸில் நடந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சோனியாகாந்தி திடீர் மருத்துவமனையில் அனுமதி

சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரதட்சணை புகார்.. மாமியார் வீட்டு முன்பு டீ கடை போட்டு நூதன போராட்டம்

ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.