இந்தியா

யாசகம் வாங்கி தானம் செய்த நபர்.. பஞ்சாபில் நெகிழ்ச்சி சம்பவம்!

யாசகர் ஒருவர் பஞ்சாபில் குளிரில் வாடுவோருக்குத் தான் சேமித்த பணத்தில் 500 போர்வைகள் தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாசகம் வாங்கி தானம் செய்த நபர்.. பஞ்சாபில் நெகிழ்ச்சி சம்பவம்!
Beggar Donates Money He Received
வட இந்தியாவில் நிலவும் கடுமையான குளிரால் வாடும் ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு உதவுவதற்காக, பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் யாரகர் ஒருவர் செய்திருக்கும் தன்னலமற்ற செயல் பலரின் மனதைத் தொட்டுள்ளது.

'போர்வை தானம்' அமைத்த ராஜு

தமக்கே போதுமான வசதி இல்லாதபோதும், உறைய வைக்கும் குளிரைச் சமாளிக்க மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் ராஜு ஒரு 'போர்வை லங்கர்' (போர்வை தானம்) அமைப்பை ஏற்படுத்தி, சுமார் 500 போர்வைகளை வீடற்றவர்களுக்கு விநியோகித்துள்ளார். இந்தச் செயல் கடினமான நேரத்தில் மனிதநேயத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

பிரதமரின் பாராட்டு பெற்ற சமூக சேவகர்

ராஜு சமூக சேவைக்கு புதியவர் அல்ல. கொரோனா காலகட்டத்தில் அவர் செய்த உதவிகளுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் ராஜுவைக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க அவர் உதவியுள்ளார். கருணை என்பது செல்வத்தைப் பொறுத்தது அல்ல என்பதை ராஜுவின் இந்தச் செயல்கள் காட்டுகின்றன.

'கடவுளின் கொடுத்த கடமை'

செய்தியாளர்களிடம் பேசிய ராஜு, "தான் சில சமயங்களில் வெறும் 10 ரூபாயை மட்டும் சேகரித்துப் போர்வைகளை ஏற்பாடு செய்ததாகவும், தனது தேவையில் வந்து நிற்கும் யாருக்கும் உதவ வேண்டும் என்பதே கடவுள் தனக்குக் கொடுத்த கடமை" என்று தான் நம்புவதாகவும் *-தெரிவித்தார். தனக்கு நிரந்தரமாக வசிக்க இடமில்லை என்பதால், ஒரு வீட்டை வழங்குமாறு அவர் அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளார். சமுதாயம் இவரைப் பார்த்து கற்றுக்கொண்டு உதவ முன்வர வேண்டும் என்று உள்ளூர் மக்கள் ராஜுவின் செயலைப் பாராட்டியுள்ளனர்.