இந்தியா முழுவதும் உள்ள 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த புதுச்சேரியிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று தரவுகளைச் சேகரித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாரப்பூர்வமான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வரைவுப் பட்டியலில் இருந்து இறுதிப் பட்டியல் வரை
கடந்த மாதம் 16-ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. தொடக்கத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 467 வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 9 லட்சத்து 18 ஆயிரத்து 11 பேர் இடம்பெற்றிருந்தனர். அதன் பிறகு, விடுபட்ட தகுதியுள்ள நபர்களைச் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தில் சுமார் 42,719 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டும், 16,619 வாக்காளர்கள் நீக்கப்பட்டும் தற்போது முழுமையான இறுதிப் பட்டியல் தயாராகியுள்ளது.
9.44 லட்சம் வாக்காளர்கள்
புதிதாக வெளியிடப்பட்டுள்ள இறுதிப் பட்டியலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 9,44,211 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இறுதிப் பட்டியல் விவரம்:
ஆண் வாக்காளர்கள்: 4,43,595
பெண் வாக்காளர்கள்: 5,00,477
மூன்றாம் பாலினத்தவர்: 139
பெரிய மற்றும் சிறிய தொகுதிகள்
தொகுதிகளின் நிலவரப்படி, வாக்காளர்களின் எண்ணிக்கையில் வில்லியனூர் தொகுதி மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது. இத்தொகுதியில் 42,679 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ராஜ்பவன் தொகுதி பதிவாகியுள்ளது. இங்கு 20,962 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

LIVE 24 X 7