பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் சட்டக் கல்லூரியில், சக மாணவியைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மாணவர் ஒருவர், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வகுப்பறையில் அரங்கேறிய துயரம்
உஸ்மா பகுதியில் அமைந்துள்ள 'மாய் பாகோ சட்டக் கல்லூரியில்' இன்று காலை வகுப்புகள் தொடங்குவதற்குச் சற்று முன்பாக இந்த விபரீதம் நிகழ்ந்தது. மல்லியன் கிராமத்தைச் சேர்ந்த பிரின்ஸ் ராஜ் என்ற மாணவர், சந்தீப் கவுர் என்ற மாணவியுடன் வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாகப் பிரின்ஸ் ராஜ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சந்தீப் கவுரை நோக்கிச் சுட்டார். இதில் குண்டு பாய்ந்த அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, அதே துப்பாக்கியால் பிரின்ஸ் ராஜ் தனது தலையிலும் சுட்டுக்கொண்டார். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. பிரின்ஸ் ராஜ் தனது பையுடன் வகுப்பறைக்குள் நுழைந்து, சந்தீப் கவுர் மற்றும் மற்றொரு மாணவியிடம் சிறிது நேரம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் மூவரும் பின் வரிசை இருக்கைகளுக்குச் சென்று அமர்ந்துள்ளனர். அப்போது திடீரென எழுந்த பிரின்ஸ் ராஜ், தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து மிக அருகாமையில் வைத்துச் சந்தீப் கவுரைச் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓட, அடுத்த சில வினாடிகளில் பிரின்ஸ் ராஜ் தன்னையும் சுட்டுக்கொண்டு கீழே விழுந்துள்ளார்.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு: கலங்கும் தாய்!
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீசார், விரைந்து வந்து சந்தீப் கவுரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், உயிரிழந்த மாணவியின் தாய் கல்லூரி நிர்வாகத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். "துப்பாக்கியுடன் ஒரு மாணவர் கல்லூரிக்குள் நுழைந்ததை நிர்வாகம் எப்படி கவனிக்கத் தவறியது? மாணவர்களின் பாதுகாப்புச் சோதனைகள் முறையாக நடக்கவில்லையா?" என்று கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பிய அவர், தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடி வருகிறார்.

LIVE 24 X 7