நடிகர் துல்கர் சல்மான் தான் பூட்டானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வாங்கியக் காரைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததற்கு எதிராக, நடிகர் துல்கர் சல்மான் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சுங்கவரி செலுத்தியது உள்ளிட்ட உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தும் அதிகாரிகள் அதனைக் கருத்தில் கொள்ளவில்லை என்று அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், வெளிநாட்டிலிருந்து (பூட்டான்) இறக்குமதி செய்யப்பட்ட ஒரு காரைப் பயன்படுத்தி வந்தார். இந்தக் காரை அண்மையில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காரைப் பறிமுதல் செய்ததற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த துல்கர் சல்மான், தான் சுங்கவரி செலுத்தியது உள்ளிட்ட வாகனத்தின் உரிமைக் கோரலுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சுங்கத்துறை அதிகாரிகள் அந்த ஆவணங்களைப் பரிசீலிக்காமல், தனது காரை முறையின்றிப் பறிமுதல் செய்ததாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கேரள உயர்நீதிமன்றம், இது குறித்து சுங்கத்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மானின் கார் பறிமுதல் விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.