பெண்களைப் பார்த்து கண் அடிப்பது அல்லது பிளையிங் கிஸ் (Flying Kiss) போன்ற செய்கைகள் ஒரு பெண்ணின் கண்ணியத்தைச் சிதைக்கும் பாலியல் துன்புறுத்தல் என்று சண்டிகர் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சண்டிகரைச் சேர்ந்த ஒரு பெண் தனது வீட்டின் நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 62 வயதான அசோக் குமார் என்பவர் மதுபோதையில் அவரிடம் ஆபாசமான செய்கைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கண் அடித்ததுடன், 'பிளையிங் கிஸ்' கொடுத்து, 500 ரூபாய் நோட்டை அவர் மீது வீசி அவமரியாதை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிமன்றத்தின் கருத்து
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதித்துறை நடுவர் சச்சின் யாதவ், அசோக் குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தார். இது குறித்து நீதிபதி கூறியதாவது: "கண் அடிப்பது மற்றும் பிளையிங் கிஸ் கொடுப்பது போன்றவை ஒரு பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தை மீறும் செயலாகும். இது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (IPC) 354A பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தலாகவே கருதப்படும்" என்று தீர்ப்பளித்தார்.
இருப்பினும் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம் அவர் 6 மாத கால கண்காணிப்பில் இருப்பார் என்றும் அந்த காலகட்டத்தில் அவர் ஏதேனும் தவறு செய்தால் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

LIVE 24 X 7