பெங்களூருவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
சிரா பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவர், தனது முதல் கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்றிருந்த நிலையில், லோஹிதாஷ்வா என்பவரை மூன்று மாதங்களுக்கு முன்பு ரகசியமாகத் திருமணம் செய்துள்ளார். ரேகாவுக்கு 12 வயதில் ஒரு மகளும் 13 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். ரேகா - லோஹிதாஷ்வா திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 22 ஆம் தேதி சுங்கடகாட்டே பேருந்து நிறுத்தத்தில் தனது 13 வயது மகளுடன் ரேகா நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த லோஹிதாஷ்வா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த லோஹிதாஷ்வா ரேகாவை கத்தியால் தாக்கியுள்ளார். முதலில் இரண்டு முறை குத்தியவர், பின்னர் அவரை இழுத்துச் சென்று மேலும் ஒன்பது முறை குத்தியுள்ளார். பொதுமக்கள் தடுக்க முயன்றபோது, கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சரணடைந்த கணவன்
பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ரேகா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, காமாக்ஷிபாளையா போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், லோஹிதாஷ்வா தானாக முன்வந்து சரணடைந்தார்.
இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.