திரிபுரா மாநிலம், உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற திரிபுரா சுந்தரி கோயில் வளாகத்தை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றது வந்தது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி செப்.22 (இன்று) தொடங்கி வைத்தார்.
திரிபுரா சுந்தரி கோயில்
நவராத்திரி திருவிழாவின் முதல் நாளில், கோயிலுக்கு வருகை தந்த பிரதமர், அங்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். இந்தியாவின் 51 சக்தி பீடங்களில் ஒன்றான இந்த பழமையான கோயில், மத்திய அரசின் 'பிரசாதம்' திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.52 கோடியும், மாநில அரசு ரூ.7 கோடியும் செலவிட்டுள்ளது.
புதிய நடைபாதைகள், புதுப்பிக்கப்பட்ட நுழைவாயில்கள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் மற்றும் சிறப்பான வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும். கடைகள், தியான மண்டபம், பக்தர்கள் தங்கும் அறைகள் மற்றும் அலுவலக அறைகள் கொண்ட மூன்று மாடி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சரிவுப் பாதை மற்றும் லிஃப்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பயன்கள்
இந்த மேம்பாட்டுத் திட்டங்கள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதோடு, ஆன்மிக சுற்றுலாவை அதிகரிக்கும் என்றும், இப்பகுதியில் வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திரிபுராவுக்கு வருகை தந்த பிரதமர், மாநில முதல்வர் மாணிக் சாகா மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், அவர் அருணாச்சல பிரதேசத்தில் ரூ.5,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அவற்றை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.