மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் ஒருவர் நேற்று ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது உள்ளங்கையில் எழுதி வைத்திருந்த தற்கொலைக் குறிப்பில், ஒரு போலீஸ் அதிகாரி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தற்கொலைக் குறிப்பில் பகீர் குற்றச்சாட்டுகள்
உயிரிழந்த மருத்துவர் தனது உள்ளங்கையில் எழுதியிருந்த குறிப்பில், போலீஸ் எஸ்ஐ கோபால் பதானே என்பவர் ஐந்து மாதங்களாகத் தன்னை பலமுறை வன்கொடுமை செய்ததாகவும், பிரசாந்த் பான்கர் என்ற மற்றொரு நபர் மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தகவல் கிடைத்ததும், போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மருத்துவரின் கையில் எழுதப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டுக் குறிப்பு, தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவு
சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி கோபால் பதானே உடனடியாகச் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதும் பிரசாந்த் பான்கர் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சதாரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளருடன் உடனடியாகப் பேசினார். உள்துறைப் பொறுப்பையும் வகிக்கும் அவர், குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியை உடனடியாகப் பணி நீக்கம் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

LIVE 24 X 7