பீகார் மாநிலத்தின் 243 சட்டமன்றத் தொகுதிகளில் எஞ்சியுள்ள 122 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டத் தேர்தலில் பீகார் வரலாற்றில் இல்லாத அளவு அதிக வாக்குகள் பதிவான நிலையில், இந்தக் கட்டத் தேர்தலிலும் வாக்காளர்கள் உற்சாகமாக பங்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு நிலவரம்
2 ஆம் கட்டத் தேர்தலின் ஆரம்ப நிலவரப்படி, காலை 9 மணி வரை மாநிலத்தில் 14.55% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்தக் கட்டத்தில் அதிகபட்சமாகப் பீகாரின் புர்னியா மாவட்டத்தில் 15.54% வாக்குப்பதிவாகியுள்ளது. முதல் கட்டத் தேர்தலில் சுமார் 7 சதவீத வாக்குகள் கூடுதலாகப் பதிவானது போல, இரண்டாம் கட்டத் தேர்தலிலும் பெண்களின் பங்கேற்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர் எண்ணிக்கை
தேர்தல் ஆணையத்தின் தகவல்களின்படி, இன்றைய இரண்டாம் கட்டத் தேர்தலில் மொத்தம் 3.7 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் 1,74,68,572 பேர் பெண்கள் ஆவர். ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்தக் கட்டத்தில் மொத்தம் 1,302 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 136 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.
முக்கியக் கூட்டணிகள் களத்தில்
இன்று தேர்தல் சந்திக்கும் 122 தொகுதிகளில் ஆளும் என்.டி.ஏ. மற்றும் எதிர்க்கட்சியான மெகா கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மெகா கூட்டணி சார்பில் ஆர்.ஜே.டி. 70 இடங்களிலும், காங்கிரஸ் 37 இடங்களிலும், வி.ஐ.பி. 8 இடங்களிலும், சி.பி.ஐ. (எம்.எல்.) 5 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. என்.டி.ஏ. சார்பில் பா.ஜ.க. 52, ஜே.டி.யு. 45, எல்.ஜே.பி. 16, ஹெச்.ஏ.எம். 6, ஆர்.எல்.எம். 4 தொகுதிகளில் களமிறங்கியுள்ளன. மேலும், பிரஷாந்த் கிஷோர் (ஐன்சுராஜ் கட்சி) 122 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளார்.

LIVE 24 X 7