மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றித் தாமதப்படுத்துவது அல்லது கிடப்பில் போடுவது குறித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்புடைய வழக்கில், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.
அதில், "மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், எந்தப் பதிலும் அளிக்காமல் ஆளுநர்களால் கிடப்பில் போட்டு வைக்க முடியாது. கால வரம்பின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.
மத்திய அரசு குறிப்பிட்டதைப் போல் ஆளுநருக்கு நான்காவது தெரிவு கிடையாது, மூன்று தெரிவுகள் மட்டுமே இருக்கின்றன. மாநில அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குதல், நிராகரித்தல் மற்றும் திருத்தங்கள் கோரி கருத்துகளுடன் சட்டப்பேரவைக்கு அனுப்புதல் அல்லது அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதற்குதான் ஆளுநருக்கு விருப்புரிமை உள்ளது. மசோதாவை நிறுத்தி வைப்பது (கிடப்பில் போடுவது) கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது" என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே முதன்மை
மேலும், "ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார அமைப்புகள் இருப்பதை எங்களால் ஏற்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையும்தான் மாநிலத்தில் முதன்மையானதாக இருக்க முடியும்" என்றும் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
"ஆளுநர்கள் மாநில அரசுக்கு இடையூறு விளைவிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ளக் கூடாது. ஒரு மசோதா சட்டமாக மாறும்போது மட்டுமே நீதித்துறை மறு ஆய்வு செய்ய முடியும். தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது" என்றும் இந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIVE 24 X 7