நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (டிசம்பர் 1), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளும் குற்றச்சாட்டுகளும்
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரகதியில் திருத்தப் பணிகளை மேற்கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமான வாக்காளர்களை மத்திய அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் நீக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மக்களவையில் அமளியும் ஒத்திவைப்பும்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. மக்களவையில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை அவைத் தலைவர் ஏற்க மறுத்ததால், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியைத் தொடர்ந்து, மக்களவை முதலில் பகல் 12 மணிவரை, பின்னர் பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், பிற்பகலிலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என்றும் அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

LIVE 24 X 7