இந்தியா

டெல்லி கார் வெடிப்பு: முக்கிய குற்றவாளியான உமர் முகமதுவின் வீடு தகர்ப்பு!

டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான மருத்துவர் உமரின் வீட்டை பாதுகாப்பு படையினர் வெடி வைத்து தகர்த்தனர்.

டெல்லி கார் வெடிப்பு: முக்கிய குற்றவாளியான உமர் முகமதுவின் வீடு தகர்ப்பு!
Delhi Bomber Umar Mohammad's House Demolished
டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான மருத்துவர் உமர் முகமதுவின் வீடு, தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

டெல்லி கார் குண்டு வெடிப்பு

டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த 10 ஆம் தேதி மாலை ஹூண்​டாய் ஐ20 கார் ஒன்று பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் அதிர்வலைகளை ஏற்​படுத்​தி​யது.

இது தொடர்​பான விசா​ரணை​யில், வெடிபொருளு​டன் கூடிய அந்த காரை ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி ஓட்டி வந்​தது தெரிய​வந்​தது. வெடித்த காரில் இருந்து சேகரிக்கப்பட்ட உடற்பாகங்கள் மற்றும் உமரின் தாயாரிடம் சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரியை பகுப்பாய்வு செய்ததில் அந்த இரண்டும் ஒத்துப்போவது உறுதியானது. இதனடிப்படையில் காரை மருத்துவர் உமர் ஓட்டி வந்தது உறுதி செய்யப்பட்டது

பயங்கரவாதிக்கு எதிரான நடவடிக்கை

இந்த நிலையில், இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையை விடுக்கும் நோக்கில், புல்வாமாவில் உள்ள உமரின் வீடு பாதுகாப்புப் படையினரால் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. பாதுகாப்பு படையினர் ஐஇடி வெடிபொருட்களை பயன்படுத்தி வீட்டை தகர்த்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் வீடுகளுக்கு எதிராகவும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.