இந்தியா

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு!

உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சூா்ய காந்த் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்ய காந்த் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னணியும் பதவிக்காலமும்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர். கவாய் நேற்று (நவ.23) மாலையுடன் ஓய்வு பெற்றார். முன்னதாக சூர்ய காந்த் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள சூர்ய காந்த், அடுத்த 15 மாதங்கள் அந்தப் பதவியில் நீடிப்பாா். இவர் வரும் 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி தனது 65 வயது நிறைவில் ஓய்வுபெற உள்ளார்.

முக்கியத் தீர்ப்புகளில் பங்களிப்பு

தலைமை நீதிபதியாகப் பதவியேற்பதற்கு முன்னர் நீதிபதி சூர்ய காந்த், பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கிய அமர்வுகளில் அங்கம் வகித்துள்ளார். அவற்றில் ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பான வழக்கு, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான வழக்கு, மற்றும் பெகாசஸ் உளவு மென்பொருள் தொடர்பான வழக்கு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நீதிபதி சூர்ய காந்தின் வரலாறு

நீதிபதி சூர்ய காந்த், அரியானா மாநிலத்தில் 1962 ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் முதலில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர், 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இமாச்சல பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.