பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காலை 9:30 நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) முன்னிலை வகித்து வருகிறது. இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
முன்னிலை நிலவரம் மற்றும் பெரும்பான்மை
மொத்தமுள்ள 243 இடங்களில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 150-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காலை 9:30 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 154 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) 77 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 68 இடங்களிலும், பிற கட்சிகள் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் 24 தொகுதிகளைக் கொண்ட சீமாஞ்சல் பகுதியில் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணி 10 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
மறுபுறம், இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் 84 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். இதில் ராஷ்டீரிய ஜனதா தளம் 64 இடங்களிலும், காங்கிரஸ் 11 இடங்களிலும், பிற கட்சிகள் 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மற்ற கட்சிகளின் நிலை
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மேலும், பிற கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

LIVE 24 X 7