இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; 50 சவரன் வரதட்சணை கேட்டு மிரட்டல்; திருமங்கலம் போலீசார் நடவடிக்கை!
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்ய உறுதியளித்த இளைஞர் ஆதித்யன், நிச்சயத்திற்குப் பிறகு 50 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாகக் கேட்டுத் திருமணம் செய்ய மறுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ஆதித்யனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.