தமிழ்நாடு

வியட்நாம் பெண்ணை கரம் பிடித்த நெல்லை இளைஞர்...தமிழ் முறைப்படி நடந்த திருமணம்

எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டதால் காதலித்தோம். ஏழு ஆண்டுகளாக அவரை காதலித்து வந்தேன். இதைத்தொடர்ந்து நாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்து, இரு வீட்டாரிடம் தெரிவித்தோம். அவர்களும் எங்களது திருமணத்திற்கு சம்மதம் என நெல்லை இளைஞர் தெரிவித்தார்.

வியட்நாம் பெண்ணை கரம் பிடித்த நெல்லை இளைஞர்...தமிழ் முறைப்படி நடந்த திருமணம்


வியட்நாம் பெண்ணுடன் காதல்


நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் சுப்பிரமணியன், இவர் வியட்நாமில் வேலை செய்து வருகிறார். இவருடன் அதே நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மைன்லே துய் என்பவரும் வேலை செய்து வருகிறார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது.


கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த அவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.இதுகுறித்து அவர்கள் இரு வீட்டார்களிடம் தெரிவித்து சம்மதம் பெற்றனர். இந்நிலையில் அவர்கள் நெல்லையில் தமிழ் முறைப்படி திருமணம் நடத்த முடிவெடுத்து உள்ளனர். இதற்கு மைன்லே துய் வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து நெல்லையில் டவுன் கோவிலில் திருமண ஏற்பாடு நடந்தது.

அதன்படி இன்று டவுன் கோவிலில் மகேஷ் சுப்பிரமணியனுக்கும், மைன்லே துய்க்கும் திருமணம் நடந்தது. இதில் இரு வீட்டாரை சேர்ந்தவரும் கலந்து கொண்டு புதுமண தம்பதியரை வாழ்த்தினர். இதுகுறித்து மகேஷ் சுப்பிரமணியன் கூறுகையில், வேலை செய்து கொண்டிருந்தபோது ஒருவருக்கொருவர் நட்பு ஏற்பட்டது.

தமிழ் முறைப்படி திருமணம்

எங்கள் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டதால் காதலித்தோம். ஏழு ஆண்டுகளாக அவரை காதலித்து வந்தேன். இதைத்தொடர்ந்து நாங்கள் திருமணம் செய்ய முடிவெடுத்து, இரு வீட்டாரிடம் தெரிவித்தோம். அவர்களும் எங்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

அதனால் தமிழ் முறைப்படி டவுன் கோயிலில் திருமணம் செய்ய முடிவு எடுத்து அனைவரின் ஆசீர்வாதத்திலும் எங்களுக்கு திருமணம் நடந்துள்ளது. என்றார். அதைத்தொடர்ந்து அவரது மனைவி மைன்லே துய் கூறுகையில், தமிழ் முறைப்படி நான் புதிதாக புடவை கட்டி உள்ளேன். நான் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறேன் என கலகலப்பாக அவர் பேசியது பலரையும் கவர்ந்தது.