தமிழ்நாடு

திமுக நிர்வாகி மீது கல்லூரி மீதான புகார்.. ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகம் விளக்கம்!

திமுக நிர்வாகி தெய்வசெயல் ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்லூரி மாணவி புகார் அளித்த வழக்கில், புகார் மீது காவல்துறை அலட்சியம் காட்டுவதாக கல்லூரி மாணவி குற்றச்சாட்டிய வழக்கில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகி மீது கல்லூரி மீதான புகார்.. ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகம் விளக்கம்!
திமுக நிர்வாகி மீது கல்லூரி மீதான புகார்.. ராணிப்பேட்டை எஸ்.பி. அலுவலகம் விளக்கம்!
பருத்திபுத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ப்ரீத்தி, காவனூர் பகுதியை சேர்ந்த அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வசெயல், தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், இது தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவதாகவும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து ப்ரீத்தி வீட்டுக்கு சென்று நெமிலி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி வாக்குமூலம் பெற்றபோது, விதிகளை கடைபிடிக்காமல், டி.எஸ்.பி. ஜாபர் சித்திக் சென்றதாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியானது.

மேலும் கல்லூரி மாணவி ப்ரீத்தி, நேற்று இரவு வெளியிட்ட வீடியோ பதிவில், காவல் துறையினர் தான் வழங்கிய புகாரின் மீது சம்பந்தமில்லாத கேள்விகளை முன் வைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து இந்த வழக்கு தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவி, தெய்வசெயல் என்பவரால் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் சில மிகைபடுத்தப்பட்ட தகவல்கள் பரவிவருவதாகவும், மனுதாரர் தான் அளித்த வெவ்வேறு புகார்களில் தன்னை போன்று பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றுக்கொன்று பொறுத்தமற்ற தகவல்களை தெரிவித்துள்ளதோடு, அப்பெண்களைப் பற்றிய எவ்வித தகவல்களையோ, முகாந்திரத்தையோ விசாரணையின்போது தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசியல் பிரமுகரின் உதவியாளர் ஒருவருக்கு கல்லூரி மாணவியை இரையாக்க முயற்சித்ததாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளது உண்மைக்கு மாறானது என்றும் மனுதாரர் கொடுத்த புகார்களில் இதுபோன்ற தகவல் எதையும் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் மேலும் விசாரணை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில், தெய்வசெயலை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.