சாலை விதிகள் மீறல்
மோட்டார் சைக்கிளில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயம் என்ற போதிலும், ஒரு சில வாகன ஓட்டிகள் மட்டுமே இதுபோன்ற விதிமுறைகளை பின்பற்றி வாகனம் ஓட்டி வருகின்றனர்.
சென்னை போன்ற நகரங்களில் சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நிற்பதால் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை இயக்கி வருகின்றனர். மற்ற பகுதியில் பெரும்பாலும் தலைக்கவசம் இன்றியே இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இதனால் சாலை விதிகள் மீறப்படுவதுடன், தலைக்கவசம் இல்லாததால் விபத்துகள் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
கட்டாயம் ஹெல்மெட்
தொடர்ந்து விதிமுறைகளை பொதுமக்களிடம் கொண்டு சென்று அவர்களை வழிநடத்தும் அதிகாரிகளே இதுபோன்ற சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் விதி மீறலில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட எவரேனும் மோட்டார் சைக்கிளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் எனவும், இல்லையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற ஒரு அறிவிப்பையும் தற்போது மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ள நிலையில், அதனை அனைவருக்கும் தெரியப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் உள்ள பேரிகார்டில் இந்த அறிவிப்பானது தற்போது ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.