தமிழ்நாடு

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்...இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

மனைவி, குழந்தைகள் இல்லாத நேரம் பார்த்து பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக வெட்டி உள்ளனர்

 13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்...இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு தாக்குதலில் காயம் அடைந்த இளைஞர் மற்றும் அவரது மனைவி
13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே எட்டுபுளிக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி (32) - மகாலட்சுமி (28) ஆகிய இருவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு பின்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு திருவோணம் பகுதியில் வசித்து வருகின்றனர்.கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மகாலட்சுமி தனது கணவருடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாத நேரத்தில் மகாலட்சுமி உறவினர்கள் இளைஞரை சரமாரியாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த கலியமூர்த்தி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

13 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த விவகாரத்தில் தான் இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா? அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமண விவகாரத்தில் இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொடூரமாக வெட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.