Budhan Peyarchi Palan 2024 : புதன் பெயர்ச்சி பலன்.. கன்னி ராசியில் உச்சம் பெறும் புதன்.. விபரீத ராஜயோகம் யாருக்கு?

Budhan Peyarchi Palangal 2024 in Tamil : கன்னி ராசியில் உச்சம் பெற்ற புதனால் சில ராசிக்காரர்களுக்கு பத்ர யோகம் கிடைக்கப்போகிறது. சில ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமும் கைகூடி வரப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்

Sep 19, 2024 - 15:24
Sep 19, 2024 - 16:56
 0
Budhan Peyarchi Palan 2024 : புதன் பெயர்ச்சி பலன்.. கன்னி ராசியில் உச்சம் பெறும் புதன்.. விபரீத ராஜயோகம் யாருக்கு?
budan peyarchi palan 2024

Budhan Peyarchi Palangal 2024 in Tamil : புத்தி நாயகன் புதன் மனிதர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறார். நரம்பின் நாயகன் புதன் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். புதன் வீடான கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார்.புதன் தனது சொந்த வீடான கன்னி ராசியில் வரும் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை உச்சம் பெற்று கேதுவுடன் இணைகிறார். இதனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

துலாம்:

 உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் புதன் அமர்வதால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. திடீர் பண வருமானம் வந்து திக்கு முக்காட வைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள், வாக்குவாதம் வந்து செல்லும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு பிரச்சினை, கை,கால்களில் நடுக்கம், புத்தியில் தடுமாற்றம் உண்டாகும். புதன்கிழமையில் பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு மல்லிகை பூக்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்யலாம். 

விருச்சிகம்: 

புதன் பகவான்(Budhan Peyarchi Palan) உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். இது யோகமான காலமாகும். தொட்டது துலங்கும் நல்ல செய்திகள் தேடி வரும். வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும்.  பண வருவாய் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். தினசரி சூரிய பகவானை வழிபடவும். வீட்டில் துளசி செடிகளை வளர்க்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு: 

புதன் பகவான் உங்கள் ராசிக்கு 10வது வீடான தொழில் ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் பெற்று அமரப்போகும் புதன் பகவானல் பத்ர யோகம் செயல்படப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். பண வருமானம் அதிகரிக்கும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் வெற்றி பெரும் பெற்றவர்கள் உறவினர்கள் ஆசியுடன் திருமணத்தில் முடியும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் நன்மை செய்வார்கள். புதன்கிழமைகளில் பச்சைப்பயறு வேகவைத்து புதன் பகவானுக்கு நைவேத்தியம் செய்யலாம். 

மகரம்: 

புதன் பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்யப்போவதால் பணம் தாராளமாக வரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி வழியில் அதிக உதவிகள் கிடைக்கும். 

கும்பம்:

புதன் பகவான் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைகிறார் என்றாலும் விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. எட்டில் புதன் மறைவது நல்ல அமைப்புதான் என்றாலும் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.பணம் பலவழிகளில் இருந்தும் வந்து பாக்கெட்டை நிரப்பும். வேலையில் புரமோசன் சம்பள உயர்வு நன்றாக இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கு தேவையான நிலம் வாங்குவதற்கு சரியான காலம்.வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும் கவனம் தேவை. பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை வாங்கிக் கொடுக்க நன்மைகள் நடைபெறும். 

மேலும் படிக்க : புதன் பெயர்ச்சி : சிம்மத்தில் சூரியனுடன் இணைந்த புதன்.. கவனமாக இருக்க வேண்டியது யார்?

மீனம்:

புதன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் புதன் ஆட்சி உச்சம் பெற்று அமர்வதால் பத்ர யோகம் செயல்படும். பணம் பல வழிகளில் இருந்தும் வரும். சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம்.கேந்திராதிபத்ய தோஷம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும். உடல் நலனின் அக்கறை தேவை இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் தேடி வரும். புதன்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் கொடுக்க நன்மைகள் அதிகரிக்கும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow