Ind Vs BAN Test: சொந்த மண்ணில் மாஸ் காட்டிய தமிழன்.. அஸ்வின் அதிரடி சதம்.. சரிவில் இருந்து மீண்ட இந்தியா!

ஒருமுனையில் ஜடேஜா நிதானமாக விளையாடி பவுண்டரிகளை விரட்ட, மறுமுனையில் அஸ்வின் தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் ஷாட்களை விளையாடி பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். வங்கதேச கேப்டன் 7 பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

Sep 19, 2024 - 17:43
Sep 19, 2024 - 17:44
 0
Ind Vs BAN Test: சொந்த மண்ணில் மாஸ் காட்டிய தமிழன்.. அஸ்வின் அதிரடி சதம்.. சரிவில் இருந்து மீண்ட இந்தியா!
India VS Bangladesh Test

சென்னை: வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தங்கள் அணி முதலில் பீல்டிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. இதை வங்கதேச பவுலர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். தொடக்கம் முதலே வேகத்தில் மிரட்டிய ஹசன் மஹ்மூத். ரோகித் சர்மாவை 6 ரன்னில் வெளியேற்றினார். தொடர்ந்து அவரது வந்த பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சுப்மன் கில் (0), விராட் கோலி (6 ரன்) என அடுத்தடுத்து அவுட் ஆக, இந்தியா 34/3 என பரிதவித்தது. 

ஒருபக்கம் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாட அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஸ்கோர் 96 ஆக உயர்ந்தப்போது பண்ட் 39 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் (56 ரன்) அடித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுல் (16 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப மீண்டும் 144/6 என நெருக்கடியில் சிக்கித்தவித்தது இந்தியா. 

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திரே ஜடேஜா பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒருமுனையில் ஜடேஜா நிதானமாக விளையாடி பவுண்டரிகளை விரட்ட, மறுமுனையில் அஸ்வின் தனக்கே உரித்தான ஸ்டைலிஷ் ஷாட்களை விளையாடி பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். வங்கதேச கேப்டன் 7 பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. குறிப்பாக தொடக்க வீரர்களின் விரலில் கண்ணை விட்டு ஆட்டிய ஹசன் மஹ்மூத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜடேஜா டெஸ்ட் போட்டியில் தனது 21வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதேபோல் சொந்த மண்ணில் மாஸ் காட்டிய அஸ்வின் டெஸ்ட்டில் 6வது சதம் (102 ரன்) அடித்து சாதனை படைத்தார். இதில் 10 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும். வங்கதேச பவுலர்களால் கடைசிவரை இந்த ஜோடியை பிரிக்கவே முடியவில்லை.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழந்து 339 ரன்கள் குவித்தது. ஜடேஜா(82 ரன்), அஸ்வின் (102 ரன்) களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் 7வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். நஹித் ராணா, மெஹிதி ஹசன் மிராஸ் தலா 1 விக்கெடுகளை வீழ்த்தினார்கள். நாளை 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow