நவராத்திரி கொலு பார்க்க ராஜ்பவனுக்கு வாங்க.. அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி

அக்டோபர் 3 முதல் அக்டோபர் 12 வரை சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி கொலு 2024 நிகழ்வைக் கொண்டாட மக்களை அன்புடன் அழைக்கிறது. இந்த பண்டிகை நிகழ்வில் உங்கள் பங்கேற்பை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sep 19, 2024 - 17:10
Sep 19, 2024 - 17:20
 0
நவராத்திரி  கொலு பார்க்க ராஜ்பவனுக்கு வாங்க.. அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி
navratri golu function in tamilnadu governor house raj bhavan

அக்டோபர் 3 முதல் அக்டோபர் 12 வரை  சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி கொலு 2024 நிகழ்வைக் கொண்டாட மக்களை அன்புடன் அழைக்கிறது. இந்த பண்டிகை நிகழ்வில் உங்கள் பங்கேற்பை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 03, 2024 அன்று நடைபெறும் நவராத்திரி கொலு விழாவை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்ட அறிவிப்பில், 'ஆளுநர் மாளிகையில் அக்டோபர் 3 முதல் அக்டோபர் 12 வரை தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் 'நவராத்திரி கொலு' கொண்டாட்டங்களில் பங்கேற்க பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் மனதார வரவேற்கப்படுகின்றனர்.

நவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, தொடர்பு எண், புகைப்பட அடையாள சான்று மற்றும் வருகைக்கான தேதி உள்ளிட்ட விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு (‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ அடிப்படையில்) அனுமதி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மற்றும் பிற விவரங்களுடன் அனுப்பப்படும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டதற்கான சான்றாக அமையும். பார்வையாளர்கள், சென்னை ஆளுநர் மாளிகையின் வாயில் எண்-2 -ல் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் மற்றும் அசல் புகைப்பட அடையாள சான்று (விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்யப்பட்ட) ஆணவத்துடன் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன் வர வேண்டும்.

வெளிநாட்டு மக்களும் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். அவர்களின் அசல் கடவுச்சீட்டு மட்டுமே அடையாள சான்றாக கருதப்படும். சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்திற்குள் செல்போன் மற்றும் புகைப்பட கருவிகள் அனுமதிக்கப்படாது. நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை சென்னை ஆளுநர் மாளிகைக்கு உண்டு' என அதில் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow