புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடந்து வரும் அரசு நலத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்கள் எந்த அளவில் இருக்கிறது. மாவட்ட வளர்ச்சிக்கு என்ன என்ன தேவைகள் என்பது குறித்து ஆய்வு கூட்டம் ஆட்சியர் அருணா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விசிக தலைவர் திருமாவளவன் மாநாட்டில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு அழைப்பு விடுத்தது குறித்து பேசினார்.
அதில், “ஏழைகள் வீடுகள் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 12 ஆயிரம் பேருக்கு மேல் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு காப்பீட்டு திட்டத்திற்கு அறுவை சிகிச்சைக்கு உடனடியாக தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் காவல்துறை 24 மணி நேரமும் பணியில் உள்ளனர் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிகவும் பாதுகாப்பாக உள்ளது. கைதிகளுக்கு நோய்வாய் பட்டால் அவர்களையும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில அரசு நிதியிலிருந்து நடைபெற்று வரும் பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு திட்டமான பிரதம மந்திரி வீடு கட்டம் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் தொகை மிகவும் குறைவான தொகை
அதில் வீடு எல்லாம் கட்ட முடியாத அளவுக்கு மிகவும் குறைவான தொகையை தான் அளிக்கிறார்கள் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பாராளுமன்ற நிலைக் குழுவில் உறுப்பினராக இருப்பதால் வலியுறுத்தி கூடுதல் நிதி மத்திய அரசு ஒதுக்க நடவடிக்கை எடுப்பார்.
விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு யாரை வேண்டுமானாலும் அவர்கள் அழைக்கலாம் கலந்து கொள்ளலாம். ஆனால் கூட்டணி என்பது திமுகவோடு தான் அவர்கள் இருப்பார்கள். முதல்வர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விரும்புகிற மிகச்சிறந்த நண்பராக திருமாவளவன் உள்ளார். அவர் யாரை அழைத்தாலும் முதல்வரை விட்டு எங்கேயும் போக மாட்டார்.
புதிதாக டாஸ்மார்க் கடை திறக்கப்படவில்லை. தற்காலிகமாக fl2 என்ற பெயரில் நாகரிகமாக பார் உரிமம் பெற்று நடத்தி வருகின்றனர். அதையும் குறைப்பதற்கு நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது” என்றார்.
மேலும் படிக்க: பிறந்த நாளில் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரினார் ஜெயம் ரவி
இதையடுத்து எஃப் எல் டூ பார்லிம் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக புகார்கள் வந்தது குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, “ அவர்கள் செய்துள்ள டெகரேஷனுக்கு தகுந்தார் போல் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்க தான் செய்வார்கள். நீங்கள் எதற்கு மது குடிக்க அங்கே செல்கிறீர்கள்?” என பேட்டி அளித்தார்.