BiggBoss: பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகும் ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்..? பஞ்சாயத்து கன்ஃபார்ம்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sep 20, 2024 - 00:12
 0
BiggBoss: பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகும் ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்..? பஞ்சாயத்து கன்ஃபார்ம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரஞ்சித்

சென்னை: தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம். ஹாலிவுட், பாலிவுட் வரிசையில் கோலிவுட்டுக்கும் அறிமுகமான இந்த நிகழ்ச்சியை, இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த இரண்டு சீசன்களாக கமல்ஹாசன் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கமலுக்காகவே பிக் பாஸ் பார்க்கத் தொடங்கிய ரசிகர்கள் கூட, அவரது நேர்மையை விமர்சிக்க, படங்களில் நடிக்க கால்ஷீட் இருப்பதை காரணம் காட்டி விலகினார். இதுகுறித்து கமல் வெளியிட்ட அறிக்கையும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதனையடுத்து பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என ரசிகர்களிடம் ரொம்பவே எதிர்பார்ப்பு இருந்தது. இதில் சிம்புவின் பெயர் தான் முதலிடத்தில் இருந்த நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சர்ப்ரைஸ்ஸாக என்ட்ரியானார். அதோடு விஜய் சேதுபதியின் ப்ரோமோவையும் வெளியிட்டது பிக் பாஸ் டீம். அதில் கமல்ஹாசனின் இமேஜ்ஜை கொஞ்சம் டேமேஜ் செய்திருந்தது பிக் பாஸ் & கோ. இன்னொரு பக்கம் இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகவுள்ள போட்டியாளர்கள் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

ஒவ்வொரு சீசனிலும் 50 ப்ளஸ் சீனியர் சிட்டிசன்களை களமிறக்குவது பிக் பாஸின் வழக்கம். அதன்படி, இந்த சீசனில் காமெடி நடிகர் செந்தில் பங்கேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் சர்ச்சைக்கு பெயர் போன ரஞ்சித்தும் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் பல படங்களில் நடித்துள்ள ரஞ்சித், சமீபத்தில் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கியிருந்தார். நாடகக் காதலுக்கு எதிரான படம் என கவுண்டம்பாளையத்தை ப்ரோமோட் செய்தார் ரஞ்சித். 

அதேநேரம் இப்படத்தின் ட்ரைலரில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் கவுண்டம்பாளையம் படத்தின் ரிலீஸுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஒருவழியாக நீதிமன்றம் சென்று போலீஸ் பாதுகாப்புடன் கவுண்டம்பாளையம் படத்தை ரிலீஸ் செய்தார் ரஞ்சித். அதன்பின்னர் இப்படத்தை பங்கமாக கலாய்த்து ட்ரோல் செய்திருந்தனர் ரசிகர்கள். நாடகக் காதலுக்கு எதிர்ப்பு என பிற்போக்குத்தனமான கருத்துகளை வைத்து படமாக இயக்கியுள்ளார் என விமர்சித்திருந்தனர்.

கவுண்டம்பாளையம் படத்துக்கே ரஞ்சித்தை வச்சி செய்த நெட்டிசன்கள், அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரியானால் என்ன பாடுபட போகிறாரோ என எதிர்பார்க்க வைத்துள்ளது. ஒருவேளை ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால், சக போட்டியாளர்களே அவரை மரண பங்கம் செய்துவிடுவார்கள். ஆனாலும் இதுகுறித்து பிக் பாஸ் டீம் அப்டேட் கொடுத்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow