சிகாகோவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெப்போலியன் குடும்பம்.. மகன் திருமணத்திற்கு அழைப்பு

சிகாகோவில் நாங்கள் குடும்பத்தோடு முதல்வரைச் சந்தித்ததை , எனது மூத்த மகன் தனுஷ் அக்‌ஷயா, திருமண அழைப்பதழை வழங்கிய அந்த மகிழ்வான தருணத்தை இந்த நாளில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று நடிகரும் முன்னாள் அமைச்சருமான நெப்போலியன் கூறியுள்ளார்.

Sep 16, 2024 - 16:45
 0
சிகாகோவில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெப்போலியன் குடும்பம்.. மகன் திருமணத்திற்கு அழைப்பு
nepoleon duraisamy met tn chief minister mk stalin

ஜப்பானில் மகனின் திருமணம் நடைபெற உள்ள நிலையில் சிகாகோவில்  முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து குடும்பத்தோடு அழைப்பு விடுத்துள்ளார் நெப்போலியன். புது நெல்லு புது நாத்து படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் நெப்போலியன், ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான எஜமான், கிழக்கு சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட அனைத்து படங்களும் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்தமான படமாகவே உள்ளது. 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நெப்போலியன், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது குடும்பபத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார் நெப்போலியன்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து, அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் சார்பில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தமிழ் சொந்தங்களோடு கலந்துரையாடினார்.

சிகாகோ தமிழ்ச் சங்கம், அறம் சிகாகோ, லேக் கவுண்டியில் உள்ள தமிழர்கள் சங்கம், அகரம் தமிழ் அகாடமி, அன்னை தமிழ் அகாடமி, செயின்ட் லூயிஸ் தமிழ் சங்கம், இந்தியா தமிழ்ச் சங்கம், கிரேட்டர் மில்வாக்கி தமிழ்ச் சங்கம், மெக்லீன் மாவட்ட தமிழ்ச் சங்கம், மிச்சிகன் தமிழ்ச் சங்கம், அயோவா தமிழ்ச் சங்கம், வடகிழக்கு விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம், விஸ்கான்சின் தமிழ்ச் சங்கம், மினசோட்டா தமிழ்ச் சங்கம், டென்னசி தமிழ்ச் சங்கம், கென்டக்கி தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழ் தொழில்முனைவோர் சங்கத்தினர் நேரில் சந்தித்து பேசினர்.

இதே போல அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன் தனது குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழை கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். நெப்போலியன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், அன்பு நண்பர்களே,தமிழ்ச் சொந்தங்களே,இன்று செப்டம்பர் 15 ஆம் நாள் அண்ணா பிறந்த நாள்..! கடந்த 10 நாட்களுக்கு முன்பு
Chicago வில் நாங்கள் குடும்பத்தோடு முதல்வரைச் சந்தித்ததை , எனது மூத்த மகன் தனுஷ் & அக்‌ஷயா, திருமண அழைப்பதழை வழங்கிய அந்த மகிழ்வான தருணத்தை இந்த நாளில் , இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர்,அவர்கள் இருந்த இடத்தில் ,
இன்றைக்கு தளபதி அவர்கள் இருந்து கொண்டு , கட்சியையும் , ஆட்சியையும்,சிறப்பாக வழி நடத்திக்கொண்டு இருந்தாலும் , அதே பழைய பழக்க வழக்கங்களை மறக்காமல் , நட்பு பாராட்டி, அன்போடும் பாசத்தோடும் எங்களடம் பழகியது , பேசியது எல்லாம் எங்கள் வாழ்வில் மகிழ்வான தருணங்கள்…!வாழ்வில் மறக்க முடியாதது..!மிக்க நன்றி..! என்று குறிப்பிட்டுள்ளார் நெப்போலியன்.

நெப்போலியனின் மூத்த மகன் தனுசுக்கு 25 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட நெப்போலியன் உறவுக்கார பெண்ணான, திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த விவேகானந்தர் என்பவரின் மகள் அக்ஷயாவை பேசி முடித்துள்ளார். அக்ஷயாவும் தனுஷூம் போனில் பேசிக்கொண்டதை அடுத்து இவர்களுக்கு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. உடல்நிலை பிரச்சனை இருப்பதால் தனுஷ் விமானத்தில் அதிகமாக பயணிக்க முடியாது என்பதால் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் குடும்பத்தோடு இந்தியா வந்து, வீடியோ காலின் மூலம் நிச்சயத்தை நடத்தினர்.

தனுஷ் திருமணம் வரும் நவம்பர் 7ஆம் தேதி புதன்கிழமை ஜப்பானின் தலைநகரமான டோக்கியாவில் நடைபெற உள்ளது. இதற்காக கனடாவுக்கு தன் குடும்பத்துடன் வந்த நெப்போலியன் பிறகு கப்பல் மூலம் ஜப்பானுக்கு போகப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.ஜப்பானுக்கு செல்ல 40 நாட்கள் ஆகும் என்பதால், இப்போதே திருமண பயணத்தை அவரது குடும்பத்தினர் தொடங்கி உள்ளனர்.தனது மகனை திருமணம் செய்து கொள்ளப்போகும் மருமகள் அக்ஷயாவை தனது குல தெய்வம் என்று கூறியுள்ளார் நெப்போலியன். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow