Mamata Banerjee : உயிரை காவு வாங்கிய மம்தா பானர்ஜியின் அலட்சியம்... பயிற்சி மருத்துவ மாணவியின் தந்தை பகீர் குற்றச்சாட்டு!

Kolkata Medical Student Father Accused Mamata Banerjee : அன்றைக்கு மட்டும் மம்தா பானர்ஜி அதை செய்திருந்தால் இன்றைக்கு எனது மகள் உயிருடன் இருந்திருப்பார் என கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவ மாணவியின் தந்தை வேதனையுடன் பேட்டியளித்துள்ளார்.

Sep 18, 2024 - 15:22
Sep 18, 2024 - 15:55
 0
Mamata Banerjee : உயிரை காவு வாங்கிய மம்தா பானர்ஜியின் அலட்சியம்... பயிற்சி மருத்துவ மாணவியின் தந்தை பகீர் குற்றச்சாட்டு!
உயிரை காவு வாங்கிய மம்தா பானர்ஜியின் அலட்சியம்

Kolkata Medical Student Father Accused Mamata Banerjee: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகளுக்கும், சுமார் 1,500 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் இடம். பெரும்பாலான இடங்களில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். காவலர்கள் மற்றும் சி.சி.டி.வி. கேமராக்களுக்கும் குறைவில்லை. அப்படிப்பட்ட ஓரிடத்தில் பாதி உடலில் ஆடைகளின்றி ஒரு பெண் இறந்துகிடந்தார். அவர் ஒரு முதுநிலை மருத்துவ மாணவி.  

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் உடற்கூறாய்வு அறிக்கையும் அதை உறுதிப்படுத்தியது. உதடு, வலது கை, கழுத்து, வயிறு மற்றும் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததும் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டிருந்ததும் உடற்கூறாய்வில் தெரியவந்தது. இந்தத் தகவல் கொல்கத்தா மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் விசாரணையை தீவிரப்படுத்தியது காவல்துறை.

இந்நிலையில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி தண்டனைப் பெற்றுக்கொடுக்கவும், இந்த கொலையை மூடி மறைக்க முயன்ற அதிகாரிகள், காவல்துறையினரை பதவி விலக கோரியும் ஆர்.ஜி. கர் மருத்துவனை மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. தற்போது சிபிஐ கைகளில் இருக்கும் இந்த வழக்கில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் கொலை தொடர்பான ஆதாரங்களை காவல்துறையினர் அழித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆதாரங்களை அழித்ததாகக் கூறப்படும் போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயல் என்பவரையும் மேலும் சில அதிகாரிகளையும் உடனடியாகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்போது வினீத் குமார் கோயலுக்கு பதிலாக ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் வெர்மா புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க: ஸ்டாலினும் உதயநிதியும் மேடையில்.... மூத்த அமைச்சர்கள் காலடியில்... ஆர்.பி.உதயகுமார் சரமாரி பேச்சு!

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை, “சிபிஐ அவர்களது பணியை சரியாக செய்து வருகிறார்கள். எனது மகளுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு நியாயம் கேட்டு அவரைப் போன்ற பல மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் எனது குழந்தைகள் மாதிரிதான். அவர்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது மனதுக்கு வேதனையாக இருக்கிறது. குற்றவாளி என்றைக்கு தண்டிக்கப்படுகிறாரோ அன்றுதான் எங்களது வெற்றி... அன்று தான் நாங்கள் நிம்மதி பெறுவோம். எனது மகள் படித்த மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷ் மீது 2021ம் ஆண்டே பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அப்போதே மம்தா பானர்ஜி தகுந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்திருந்தால் எனது மகள் இன்று உயிருடன் இருந்திருப்பார்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow