ஸ்டாலினும் உதயநிதியும் மேடையில்.... மூத்த அமைச்சர்கள் காலடியில்... ஆர்.பி.உதயகுமார் சரமாரி பேச்சு!

RB Udhayakumar Criticize Udhayanidhi Stalin : முப்பெரும் விழா மேடையில் உதயநிதியை மேடையில் உட்கார வைத்துவிட்டு கீழே மூத்த அமைச்சர்களை உட்கார வைத்துள்ளனர். திமுகவின் சுயமரியாதை, சமதர்மம் எங்கே போனது? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Sep 18, 2024 - 14:45
Sep 18, 2024 - 14:55
 0
ஸ்டாலினும் உதயநிதியும் மேடையில்.... மூத்த அமைச்சர்கள் காலடியில்... ஆர்.பி.உதயகுமார் சரமாரி பேச்சு!
மூத்த அமைச்சர்கள் காலடியில்... ஆர்.பி.உதயகுமார் சரமாரி பேச்சு

RB Udhayakumar Criticize Udhayanidhi Stalin : மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மறவப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் ஊரணி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். 

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “மக்களுக்காக உழைக்கும் கட்சிகளில் அதிமுகவை தவிர எந்த  கட்சியும் பிறக்கவில்லை. இனி பிறக்கப் போவதும் இல்லை. இன்றைக்கு திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் விரோத சக்தியாக திகழ்ந்து வருகிறது. இன்றைக்கு சமூகநீதி, மாநில சுயாட்சி, சமதர்மம், சுயமரியாதை என்று திமுக பவள விழாவில் பேசி வருகிறார்கள். ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் அமைந்திருக்கிறார் அவருடன் உதயநிதி அமர்ந்திருக்கிறார். மேலும் கனிமொழியும் அமர்ந்திருக்கிறார். ஆனால் மூத்த அமைச்சர்கள் கீழே அமர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் திமுகவின் சுயமரியாதை எங்கே போனது? மேடையில் இடமில்லையா? இல்லை மு.க ஸ்டாலின் மனதில் இடம் இல்லையா? முப்பெரும் விழா மேடையில் உதயநிதியை மேடையில் உட்கார வைத்துவிட்டு மூத்த அமைச்சர்களை கீழே உட்கார வைத்துள்ளனர். திமுகவின் சுயமரியாதை, சமதர்மம் எங்கே போனது?

இன்றைக்கு மக்களுக்காக இனம் வளர வேண்டும், மொழி வளர வேண்டும் என்று அதிமுக போராடி வருகிறது. அதிமுகவில் எந்த பொறுப்புக்கும் எளிதாக வர முடியும். திமுகவில் அது போன்று வர முடியாது. திமுகவின் சுயமரியாதை காப்பாற்ற ஸ்டாலின் முன் வருவாரா? 75 வருடவரலாற்றில் அதிக முறை திமுக எதிர்க்கட்சியாக தான் இருந்தது. 52 கால அதிமுக வரலாற்றில் 32 ஆண்டு காலம் ஆளும் கட்சியாக இருந்தது.

கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் திராவிட இயக்கத்தை அண்ணா ஆரம்பித்தார். வாரிசு அரசியலை அவர் ஊக்குவிக்கவில்லை. அவரது வளர்ப்பு மகள் பரிமளம் தெரியாமல் அவரது அரியாசனத்தில் அமர்ந்தபோது கூட அண்ணா அவரை மிகவும் கடிந்து கொண்டார். ஆனால் இன்றைக்கு திமுகவில் வாரிசு அரசியல் மேலோங்கி உள்ளது.

மேலும் படிக்க: காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர் நடந்தது எப்படி?.. விளக்கிய கமிஷனர்

இன்றைக்கு மின்கட்டணம் உயர்ந்து விட்டது, சொத்து வரி உயர்ந்துவிட்டது, தற்போது மீண்டும் சொத்து வரி உயர போகிறது, சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது, போதை பொருள் நடமாட்டத்தால் தமிழகமே தலை குனிந்து உள்ளது. ஆனால் இதை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 2026 தேர்தலில் எடப்பாடியாரை கோட்டைக்கும், ஸ்டாலினை வீட்டுக்கும் நீங்கள் அனுப்ப வேண்டும்” என்று கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow