Kakka Thoppu Balaji Encounter News Update : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவு ரவுடியும், தேடப்படும் குற்றவாளியுமான சம்போ செந்திலின் எதிரியாக காக்கா தோப்பு பாலாஜி உள்ளார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஆர்கே நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்து தலைமறைவாகி விட்டார். அவர் 12 முறை மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.50 மணியளவில் புளியந்தோப்பு பகுதியில், கஞ்சா கடத்தி சென்றபோது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசாரை நோக்கி, காக்கா தோப்பு பாலாஜி(Kakka Thoppu Balaji) துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால், தற்காப்புக்காக கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் என்கவுண்டர் செய்துள்ளார்.
இதில் காக்கா தோப்பு பாலாஜிக்கு(Kakkathoppu Balaji) இடது பக்க மார்பில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனையடுத்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு காக்கா தோப்பு பாலாஜியின் சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார். காக்கா தோப்பு பாலாஜி மீது 6 கொலை வழக்கு, 14 கொலை முயற்சி வழக்கு உட்பட 59 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டர்(Rowdy Kakka Thoppu Balaji Encounter) செய்யப்பட்டது எப்படி என்று வடக்கு மண்டல இணை ஆணையர் பிரவேஷ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய ஆணையர், “இன்று காலை வாகன தணிக்கை செய்தபோது இருவர் அந்த காரில் இருந்தனர். அவர்கள் அருகில் ஒரு பை வைத்து இருந்தனர்.
ஒருவர் கிழே இறங்கி விட்டார். ஓட்டுநர் காரை ஒட்டி கொண்டு சென்று விட்டார். உடனடியாக கவால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் காரை தூரத்திச் சென்றனர். குடியிருப்பு பகுதிக்கு சென்ற காக்கா தோப்பு பாலாஜி(Kakka Thoppu Balaji), போலீஸ் வாகனம் வருவதை கண்டு போலீசாரை நோக்கி கள்ளத் துப்பாக்கியால் சுட்டார்.
என்கவுண்டர் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காக்கா தோப்பு பாலாஜிக்கு சம்பந்தமில்லை. தேடப்படும் நபராக இல்லாத காக்கா தோப்பு பாலாஜி, கள்ளத் துப்பாக்கி வைத்திருந்தார். காக்கா தோப்பு பாலாஜியுடன் காரில் வந்த சத்தியமூர்த்தி, போலீஸ் பிடியில் உள்ளார். ரவுடி நாகேந்திரனுடன் காக்கா தோப்பு பாலாஜி தொடர்பு இருந்ததா என்பது தெரியவில்லை. வடசென்னையில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
காக்கா தோப்பு பாலாஜி வந்தகாரை சோதனை செய்ததில் அதில் 10 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் அரிவாள் இருந்தது. அதனை கைப்பற்றி உள்ளோம். இவர் மீது 59 வழக்குகள் உள்ளது. அதில் 6 கொலை வழக்குகளும், 17 கொலை முயற்சி வழக்குகளும் ஒரு கஞ்சா வழக்கும் மற்றும் 34 இதர வழக்குகளும் உள்ளது. என்கவுண்டர் தொடர்பாக வியாசர்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் பெருநகர குற்றவியல் 10வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரணையை தொடங்கி விட்டார்.